Sunday, October 23, 2011

Python Programming Language

இன்றைய மென்பொருள் உலகில் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்துறை வளர்ந்து வருகிறது.ஓப்பன்சோர்ஸ் என்றதும் லினக்சைதான் எல்லோரும்
நினைப்போம்.லினக்ஸ் என்பது ஓப்பன்சோர்ஸ் அடிப்படையிலான இயக்க முறைமை (Operating system) மட்டுமே.இதைத் தவிர ஓப்பன் சோர்ஸை
ஆதரிக்கும் டூல்களும் மொழிகளும் நிறைய உண்டு.அவற்றில் முக்கியமான மொழி பைத்தான் (Python) மொழியாகும்.

பைத்தான்-அறிமுகம்
ஓப்பன் சோர்ஸ் துறைக்கென்றே உருவாக்கப்பட்ட பொது பயன்பாட்டு (General purpose) மொழியே பைத்தான் ஆகும.1970களில் பிரிட்டனில் மான்டி
பைத்தான் பறக்கும் சர்க்கஸ் (Monty python's flying circus) என்றொரு நகைச்சுவைத் தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.இத்தொடரை
பார்த்து ரசித்த கைடோ வன்ரோசம் (Guido van rossum) என்பவர் 1990 ம் ஆண்டில் தான் உருவாக்கிக் கொண்டிருந்த மொழிக்கு பைத்தான் என்று பெயர்
வைத்தார்.இன்று அவர் நிறைய பைத்தான் ஆதரவாளர்களை கொண்டு டிஜிட்டல் கிரியேஷன்ஸ் (Digital creations) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி
பைத்தானின் வளர்ச்சி அடிப்படையிலான ஆய்வுகளையும் மேம்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்.


பைத்தான்-சிறப்பம்சங்கள்
ஓப்பன் சோர்சின் அதிவிரைவு மொழியாக கருதப்படும் பைத்தான் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.சி++ மொழி மூலம் காணப்படும்
தீர்வுகளை தரும்படியான அந்த மொழிக்கு நிகரான மொழியாக பைத்தானை கருதலாம்.பைத்தானின் சிறப்பம்சங்கள் வருமாறு..
பைத்தான் மொழியில் உருவாக்கப்படும் சோர்ஸ் கோடானது (Source code) Compile செய்யப்படுவதில்லை.மாறாக Interpret செய்யப்படுவதால் பைத்தான் விரைவான பயன்பாட்டு உருவாக்க டூல் எனலாம்.(Rapid application devolopment)
நினைவகத்தை தானாகவே ஒதுக்கியும் காலி செய்தும் கொள்வதால் தைதான் மொழி Garbage collection கருத்தமைவை கொண்டது.
பொருள் நோக்கிலான (Object oriented) கருத்தடைவை கொண்டதால் சி++,ஜாவா உள்ளி்ட்ட மொழிகளுக்கு நிகரான ஓப்பன்சோர்ஸ் மொழியாக வலம் வருகிறது.
பைத்தான் மொடியூல்களுக்கு (Module) தானாகவே ரீ-லோட் செய்யப்படுவதால் தைதானில் எழுதப்படும் புரோகிராம்களை திருத்தி அமைக்கும் போது (Modify) எந்தவிதமான தங்குதடையின்றி இயங்கும் வல்லமை கொண்டது.
எளிமையாக,மொழியின் இலக்கணம் (Syntax) உடனடியாக புரியும் வண்ணம் இருப்பதாலும் சிக்கலின்றி வடிவமைக்கப்பட்டதாலும் தைதான் மொழியில் எழுதப்படும் புரோகிராம்கள் படிக்க எளிமையானவையாகவும் (Readability) பராமரிக்க எளிமையானதாகவும் (Maintainability) இருக்கிறது.
GUI அடிப்படையை ஆதரிப்பதால் பைத்தான் மொழியில் எழுதப்படும் தீர்வுகள் விண்டோஸ்.மெகின்டோஸ் (Macintosh) என எல்லா வகையான இயக்க முறைமைகளிலும் இயங்கும்.
இன்டர்நெட் புரோட்டோகால் (Internet protocal) என்பதை முழுமையாக ஆதரிப்பதால் E-mail,FTP,Http,CGI உள்ளிட்ட இணையம் சார்ந்த நுட்பங்களுக்கு பெரிதும் துணை புரியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக முழுமையான ஓப்பன்சோர்ஸ் மொழி என்பதால் பைத்தான் புரோகிராம்கள் எளிதாக பிற பயன்பாட்டுத் தொகுப்புகளுடன் உட்பொதியப்படும்.(Embedded)


பைத்தானின் பயன்கள்
சிஸ்டம் புரோகிராமிங் செய்ய தேவைப்படும் Sockets,Threads,Signals,Pipes,RPC Calls,Posix bindings உள்ளிட்டவைக்கு பைத்தான் பயனளிக்கும் வரைகலை அடிப்படையிலான பயனர் இடைமுகப்பும் அதாவது TK,BMW,MFC,X-11,KDE மற்றும் Gnome உள்ளிட்ட பயனர் இடைமுகப்புகளை பைத்தான் உதவும்.
Oracle,Sybase,Postgres,MySQL உள்ளிட்ட தகவல்தள இடைமுகப்புகளுக்கு பைத்தான் உதவும்.COM,ActiveX,ASP,ODBC,.NET(டாட் நெட்) போன்ற விண்டோஸ் டூல்களை பயன்படுத்தும் மென்பொருட்களும் பைத்தான் பயனளிக்கிறது.
JPython,CGI Tools HTML/XML பார்சஸ்,Zope போன்ற இன்டர்நெட் டூல்களை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களுக்கும் பைத்தான் உதவும்.
பரவலாக்கப்பட்ட Object நுட்பங்களான DCOM-Distributed component object model,CORBA-Comman object request booker architecture போன்றவற்றிற்கும் பைத்தானில் எழுதப்படும் புரோகிராம்கள் பயன்படும்.
மேற்கண்ட பயன்களை Scriptography,Regular expresions போன்ற புரோகிராமிங் செய்ய பயன்படும் உத்திகளுக்கும் பைத்தான் உதவும்.

பைத்தான்-குறைகள்
பைத்தான் மொழி ஜாவாவைப் போன்றதாகும்.அதாவது பைத்தான் மொழியில் எழுதப்படும் கோடிங்குகள் Compile செய்யப்படாமல் Interprete செய்யப்படுகின்றன.எனவே
Exe ஃபைலினை உருவாக்காது.Bytecodeஇனை பைத்தான் புரோகிராம்கள் உருவாக்கும்.Bytecode என்பது பைத்தான் விர்ச்சுவல் மெஷின் (PVM) மூலம் உருவாகும்.
எனவே சி மொழியில் உருவாக்கப்படும் கணினி அடிப்படையிலான (System applications) தீர்வுகளை பைத்தான் மூலம் உருவாக்க இயலாது.
சி மொழி மூலம் உருவாக்கப்படும் தீர்வுகளை விட பைத்தான் தீர்வுகளின் வேகம் குறைவுதான்.ஆனால் சி++,சி மாடுலர் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் கூறுகளை
பைத்தான் உள்ளடக்கியிருப்பதால் வணிகநோக்கிலான பயன்பாடுகளை உருவாக்க முனையும்போது வெறும் பைத்தானை மட்டும் முழுமையாக பயன்படுத்த இயலாது.
எனவே வணிக நோக்கிலான தீர்வுகளை (Bussiness solutions) உருவாக்க முனைவோர் பைத்தான் மொழி கலந்த பிற மொழிகளையும் சேர்த்து பயன்படுத்த முடியும்.



பைத்தான்-டூல்கள்
பைத்தான் மொழி கொண்டு உருவாக்கப்பட்ட டூல்கள் நிறைய உண்டு.இவற்றைக் கொண்டும் பைத்தான் மொழியில் புரோகிராம்கள் எழுத முடியும். அவை..
PYedit (பை எடிட்)
பைத்தான் மொழிக்கான டெக்ஸ்ட் எடிட்டரே பை எடிட் ஆகும்.

Py view (பை வியூ)
வரைபடங்களையும் ஸ்லைடுஷோக்களையும் பார்க்க உதவும் டூலாகும்.

Py draw (பை ட்ரோ)
படங்களை வரையவும் படங்களின் பொருட்களை இடம் பெயர்க்கவும் உதவும் டூலே Pydraw ஆகும்.

Py tree (பை ட்ரீ)
ட்ரீ அமைப்பிலான புரோகிராம்களை வரைய உதவும் டூல் ஆகும்

Py clock (பை க்ளாக்)
பைத்தான் மற்றும் டீ.கே என்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட அனலாக் மற்றும் டிஜிட்டல் க்ளாக் ஆகும்.

Py toe (பை டோ)
செயற்கை நுண்ணறிவு என்பதைக் கொண்டு வரைகலைக்கென்றே உருவாக்கப்பட்ட புரோகிராம் ஆகும்.

Py form(பை ஃபோர்ம்)
ஆப்ஜெக்ட்டுக்கள் கொண்ட டேபிளில் உலவ தேவையான டூலாகும்

Py calc
பைத்தான் மொழிக்கென்றே உருவாக்கப்பட்ட கணக்கீடு தொகுப்பாகும்

Py mail
Post office protocol மற்றும் Simple mail transfer protocol கொண்ட இமெயில் Clientக்கு தேவையான டூலாகும்.

Py FTP
ஃபைல்களை இணையத்தில் பரிமாற உதவும் GUI அடிப்படையிலான டூலாகும்

Py Errata
இணையம் சார்ந்த பிழைகளை தெரிவிக்கும் டூலாகும்.மேற்கண்ட அனைத்து டூல்களும் பைத்தான் மொழியில் எழுதப்பட்டுள்ளதுதான்.இவற்றின் முதல் இரண்டு எழுத்துக்களை
பார்த்தாலே Py என்ற முன்னொட்டுடன் காட்சியளிக்கும் பைத்தான் மொழியால் உருவாக்ககப்பட்டிருந்தாலும் பிற பயன்பாடுகளின் வேலைகளையும் இவற்றின் மூலம் செய்ய
முடியும்.
இன்னும் இது போன்ற நிறைய டூல்கள் பைத்தான் மொழியில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பைத்தான்-எதிர்காலம்
ஓப்பன் சோர்சின் ஒப்பில்லா மொழியாக உலாவரும் பைத்தான் தொடக்கத்தில் பைத்தான்1.0 என்ற பதிப்பாக வந்தது.பின்1.5.2,1.6 என பதிப்புகள் வந்து இப்பொழுது பைத்தான்
2.0 என்ற புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு வந்துள்ளது.
ஓப்பன் சோர்சின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வருங்காலங்களில் இன்னும் மேம்படுத்தப்பட்ட பதிப்புக்கள் பைத்தான் மொழியில் வரலாம்.மெலும் வெறும் ஸ்கிரிப்டிங் மொழி
மட்டுமே என கருதப்பட்ட பைத்தான் பொருள் நோக்கிலான (Object oriented) புரோகிராமிங் கருத்தமைவுகளை ஏற்றுக் கொண்டுள்ளதால் பைத்தானின் பலம் மிகவும் கூடியுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக இணைய பயன்பாடுகளில் பைத்தானின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.சில மென்பொருள் நிறுவனங்களில் பைத்தானை பயன்படுத்துவதை வெளிப்ப
டுத்துவது இல்லை.இணையப்பக்கங்கள் அழிந்து போகும் அவை உலாவியில் பைத்தான் மொழியில் உருவாக்கப்படும் பிழை செய்திகளை காட்டுகிறது.
இதனைகொண்டுதான் குறிப்பிட்ட நிறுவனங்கள் பைத்தானை தங்களது இணைய தீர்வுகளுக்கு பயன்படுத்துவது தெரியவருகிறது.இதன் மூலம் நாம் பைத்தானின் வலிமையை அறிந்து
கொள்ள முடியும்.எது எப்படியோ,பிற மொழிகளை போல பிரபலம் ஆகாமல் பிரபலம் ஆகாமல் இருப்பினும் பைத்தான்,ஓப்பன் சோர்ஸ் சந்தையில் வெற்றிக்கொடி நாட்டிவருகிறது.
பைத்தானின் வளர்ச்சியை கண்டு பைத்தான் டெவலப்பர்கள் மகிழ்ச்சி அடைந்தவண்ணம் உள்ளனர்.

Google Docs& Spreadsheets

பெரிய அறையொன்றுக்குள் ஆரம்பித்த கணினிப்புரட்சி இப்போது உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது.அதே போல் கணினியை அடிப்படையாக கொண்டு கம்பிவழித்தொடர்புகளூடாக
ஆரம்பித்த இணையச் சேவைகள் இப்பொழுது கம்பியில்லாத் தொழில்நுட்பமாக மாறி,எங்கிருந்தும்,எப்போதும் எப்படியும் பயன்படுத்த கூடிய ஒன்றாக பரிணமித்திருக்கிறது.
இந்த இரண்டு சாதனைகளையும் ஒன்றுசேர ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவந்தால் எப்படியிருக்கும்?என்ன குழப்பமாக இருக்கிறதா? மேலே படியுங்கள்..

இப்போது கணினி மூலம் நாம் ஒரு செயற்பாட்டை செய்யவேண்டுமானால் எம்மிடம் ஒரு கணினி அதற்குரிய அனைத்து வன்பொருள்களுடனும் அதில் நாம் நினைத்த காரியங்களை
செய்வதற்கான மென்பொருள்களுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும்.அப்படி இருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லாமல் இணைய இணைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு கணினி
இருந்து விட்டால் போதும் மீதம் இருக்கும் காரியங்கள் அனைத்தையும் இணையவழியாகவே நீங்கள் செய்து கொள்ளலாம் என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்?

இணையத் தேடுபொறிச் செயற்பாட்டில் ஜாம்பவானான Google நிறுவனம் இந்த நவீன பொறிமுறைக்கு இப்போது அடியெடுத்து வைத்திருக்கிறது.கணினி சம்பந்தப்பட்ட எல்லா விடயங்களையும்
தன்னுடைய இணைய சேவையினூடாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் இப்போது அது இறங்கியிருக்கிறது.Writley எனப்படும் இணைய அடிப்படையிலான Word
processing மென்பொருளையும் Spreadsheets எனப்படும் Excel வகை இணையவழி மென்பொருளையும் ஒன்றினைத்து Google Docs & spreadsheets எனும் சேவையை அது அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதன் மூலம் Msword,Excel மற்றும் Openoffice போன்ற மென்பொருள்களின் உதவியுடன் நீங்கள் கணினியில் செய்யும் வேலைகளை அந்த மென்பொருள்கள் இல்லாமலேயே இப்போது நீங்கள் இணையத்தில்
Onlineஇல் இருந்தபடியே செய்ய முடியும்.இச்சேவை மூலம் இன்னும் பல நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடிகிறது.எமது கணினியில் Wordprocessing அல்லது Spreadsheet மென்பொருள் நிறுவப்படாமல்
இருந்தாலும் கூட எமது Word,Excel fileகளை Google Docs & spreadsheets இற்கு மேலேற்றுவதன் மூலம் Open செய்து கொள்ள முடியும்.வேண்டுமானால் அதில் எடிட்டிங் செய்யவும் இயலும்.

Onlineஇல் இருந்தபடியே குறித்த Google Docs & spreadsheets (http://docs.google.com) இணையத்தளத்திற்கு சென்று எமது கூகிள் கணக்கின் மூலம் Sign in ஆனதன் பின்னர் Google Docs & spreadsheets மூலம்
Word,Excel போன்ற மென்பொருள்களைக் கொண்டு உருவாக்கும் ஃபைல்களை இணையத்தளத்திலிருந்தபடியே உருவாக்கி எமது கணினியிலோ அல்லது கூகிள் சேர்வர்களிலோ அதனை சேமித்து கொள்ளலாம்.
சேர்வரில் சேமித்து வைத்தால் உங்கள் ஆவணங்களை நீங்கள் எங்கு சென்றாலும் Open செய்து அதனைப் பயன்படுத்திக்கொள்ளகூடிய வாய்ப்பும் கிட்டுகிறது.

Google Docs & spreadsheets எனும் இணைய வழிமென்பொருளானது doc,xls.csv,ods,odf,pdf,rtf,html போன்ற ஃபைல் ஃபார்மட்களுடன் மிகவும் சிறப்பாக இயங்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.ஆக நாமுருவாக்கும்
வேர்ட் டாக்குமென்டுகளை பிடிஎஃப் ஆக மாற்றி டவுன்லோட் செய்துகொள்ளக்கூடிய வசதியும் கிடைக்கிறது.
நீங்கள் உருவாக்கியுள்ள ஒரு கட்டுரையை அல்லது வரவுசெலவுத் திட்டத்தை உலகின் வேறொரு மூலையிலிருக்கும் உங்கள் நண்பருடன் சேர்ந்து தொகுக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் இதற்கும்
Google Docs & spreadsheets தீர்வாய் வருகிறது.நீங்கள் உங்கள் நண்பரின் Gmail address இற்கு அழைப்பை ஏற்படுத்தி அவரையும் உங்கள் ஆவணத்தை தொகுக்க வழி செய்யலாம் நீங்கள் தொகுக்கும்/மாற்றும்
விடயங்கள் குறித்த ஆவணப்பக்கத்திலேயே குறிப்பிட்டுக் காட்டப்படும்.இதனால் மாற்றங்களைச் செய்தவர் செய்த நேரம்,செய்த மாற்றம் என அனைத்து தகவல்களையும் விபரமாக அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது.இங்கு ஒரு ஆவணத்தை ஒரு நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் தொகுக்கலாம் இதற்கு எல்லையே கிடையாது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக Google Docs & spreadsheets உதவியுடன் உங்களால் உருவாக்கப்பட்ட ஆவணங்களை இணையப்பக்கத்திலோ அல்லது வலைப்பதிவிலோ பப்ளிஷ் செய்ய முடியும். இதற்கு எந்தவித
HTML அறிவும் தேவையில்லை.
போகிற போக்கைப் பார்த்தால் இனிமேல் கணினியில் பல வன்பொருள்களுக்கும் மென்பொருள்களுக்கும் வேலைஇருக்காது போலிருக்கிறது.எல்லாவற்றையும் இணையத்தொடர்புகளுக்கூடாகவே செய்து கொள்ள முடியும்.
REPOTED BY.HAJEEVAN

பெயரில்லாமல் ஒரு ஃபோல்டர்(Folder)

நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி(Windows XP) இயங்குதளத்தில் ஃபொல்டர்களை உருவாக்கும் போது அவற்றுக்கு பெயர் கொடுப்பது வழக்கம்.ஆனால் அவ்வாறு ஒரு ஃபோல்டரையோ அல்லது ஒரு ஃபைலையோ பெயரில்லாமல் உருவாக்க முடிந்தால்?? அதற்கும் வழி இருக்கிறது.அதை எவ்வாறு செய்வதென பார்ப்போம்.முதலில் நீங்கள் ஃபோல்டரை உருவாக்க வேண்டிய இடத்துக்கு செய்னு Right click செய்து தோன்றும் மெனுவில் New என்ற பகுதியில் ஃபோல்டர் என்பதை
தெரிவு செய்க.பின் புதிய ஃபோல்டருக்கான பெயர் கேட்கப்படும் அப்போது Alt கீயினை அழுத்தி கொண்டு 255 இலக்கத்தை அழுத்தி பின் Enter கீயை அழுத்துங்கள்.இப்போது நீங்கள் விரும்பியபடி பெயரில்லாமல் Folder உருவாகிவிடும். JUsT Fun........... TrY iT..

Monday, October 10, 2011

Facebook க்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு


கன்சாசிலுள்ள ஜோன் கிரகம் என்ற சட்டவாளர் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் சமூக வலைப்பின்னல் Facebook மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

இந்த சமூக வலைப்பின்னல் Facebook கை அமெரிக்காவிலுள்ள 150 மில்லியன் பயனாளர்களதும் நிலையைக் குறிப்பிடுகின்றது.

இத்தளத்திலிருந்து வெளியே வந்த பின்னரும் இணைய உலாவலைப் பதியும் ஒரு தடந்தொடரும் cookie இனைப் பயன்படுத்துகின்றதென்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் இவ்வாறான வழக்குகளை முன்பும் ஒரு தடந்தொடர்தல் இல்லையெனக்கூறித் தள்ளுபடிசெய்திருந்ததால் அந்த நீதிமன்றம் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளதென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இதுபற்றித் தாம் எந்தவிதக் கருத்தையும் கூறவிரும்பவில்லையென Facebook இன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் cookie மீதான சர்ச்சை ஆரம்பித்தலிருந்து இந்நிறுவனம் தாம் எந்தவிதமான தகவல்களையும் பாதுகாத்து வைத்திருக்கவோ பயன்படுத்தவோ இல்லையென்றும் தெரிவித்திருந்தது. ஏனைய தளங்களைப் போலத்தான் தாமும் பயனாளரின் பாதுகாப்பை வழங்குவதற்காக இவற்றைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்திருந்தது.

இந்த இடையீடு வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது வேண்டுமென்றே தொடர்பாடல்கள் களஞ்சியப்படுத்தப்பட்டதா என்றும் தீர்மானித்து இத்தகைய உள்நுழைதலை Facebook செய்வதைத் தடுக்கவேண்டுமென்று கிரகம் நீதிமனறத்தைக் கேட்டுக்கொண்டார்.

                           3976 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது

Saturday, October 8, 2011

உங்களின் அனைத்து கூகுள் தகவல்களையும் தரவிறக்கம் செய்வதற்கு


நாம் அனைவரும் இன்று பயன்படுத்துவதில் பெரும்பாலான சேவைகள் ஏன் கிட்டத்தட்ட அனைத்து சேவைகளுமே கூகுள் நிறுவனத்தினால் அளிக்கப்படுபவை தான்.
நாம் பயன்படுத்தும் அல்லது சேமிக்கும் அனைத்து தகவல்களும் நாம் கணக்கு திருடப்பட்டால் கோவிந்தாதான்.
அதனை தவிர்க்க நீங்கள் கூகுள் சேவைகளில் பயன்படுத்தும் அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பக்-அப் எடுக்கலாம். இதனை செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.
1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழையுங்கள்.
2. அதில் உங்கள் ப்ரொபைல் அடையாள படம் மேலே உள்ள பட்டையில் இருக்கும். அதன் மீது க்ளிக் செய்து Account Settings என்பதை செலக்ட் செய்யவும்.
3. இப்போது தோன்றும் புதிய விண்டோவில் இடதுபுற பேனலில் இருக்கும் Data Liberation என்பதை செலக்ட் செய்யவும்.
4. இப்போது Download Your Data என்ற பட்டனை உங்களின் தகவல்களை ஒரு கோப்பாக தரவிறக்கி கொள்ளலாம்.
5. ஒரு குறிப்பிட்ட சேவையின் தகவலை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்பினால் அந்த சேவையினை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

            8528 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது

iPhone 4S பற்றிய புத்தம் புதிய தகவல்கள்


iPhone 5 வெளிவருமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அப்பிளின் தலைமையகமான கியூபேட்டினோவில் iPhone 4S வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்வெளிவந்த iPhone 4 இனைவிடவும் வேகமானதாகவும் சிறந்த நிழற்படக் கருவியைக் கொண்டும் பல நிறங்களைக் காட்டுவதாகவும் இது காணப்படுகின்றது.
இதற்கு மனிதர்களின் பேச்சினை விளங்கிக்கொள்ளக் கூடிய தன்மையும் காணப்படுவதுதான் இதன் சிறப்பம்சம். எனினும் இது முற்றுமுழுதாகவே iPhone 4 இனை ஒத்தவடிவமாக உள்ளது.
இது முந்தையதைவிடவும் 7 மடங்கு வேகமாக உள்ளது. இதனை ஒக்ரோபர் 7 இலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Siri என்ற புதிய அமைப்பில் குரல் செயற்படுத்தி காணப்படுவதால் இதனால் இயற்கையான மனித மொழிகளை அறிந்து கொள்ளக்கூடியவாறு உள்ளது.
அதாவது நாம் இன்றைய காலநிலை என்ன என்று கேட்டால் அது ஒன்லைனில் காலநிலை எதிர்வு கூறல் அறிக்கைமூலம் பதிலளிக்கும்.
iPhone 4S வரமுன்னர் iOS 5 என்பதும் வெளிவரவுள்ளது. இதிலும் பல புதிய அம்சங்கள் காணப்படுகின்றன.
இதில் BBM போன்ற செய்திகள் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகை மென்பொருட்கள் அடங்கிய ஒரு folder ருவிற்றர் ஒருங்கிணைப்பு போன்றவற்றையும் கொண்டுள்ளது.

           8048 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது
 

Blogroll

About