Sunday, January 15, 2012

2012ம் ஆண்டில் மைக்ரோசொப்டின் புதிய வரவுகள்

மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு கடந்தாண்டு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. ஏனெனில் டேப்ளட் மடிக்கணணி சந்தையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பு ஏதும் அறிமுகமாகாததால் பலரின் விமர்சனத்தை சந்திக்க நேர்ந்தது.
மேலும் விண்டோஸ் கைபேசி சரியாக மக்களை சென்றடையாத காரணத்தினாலும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில் மிகத் தாமதாமாக இறங்கிய காரணத்தினாலும் பலரின் விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் இந்நிறுவனத்தில் வருமானம் சிறிதும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தாண்டு மைக்ரோசொப்ட் நிறுவனத்திடமிருந்து பல புதுமைகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவற்றை நிறைவேற்றும் பணியில் தற்பொழுது மைக்ரோசொப்ட் செயல்பட்டு வருகிறது. பெரும் எதிர்பார்க்கப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளம் இந்தாண்டு அறிமுகமாகும்.
குறிப்பாக டேப்ளட் பிசிக்களில் இந்த சிஸ்டம் முற்றிலும் மாறுதலான ஓர் அனுபவத்தினைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். ஐபேட் சாதனத்திற்கு எதிரான போட்டியில் டேப்ளட் பிசி சந்தையில் இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஓர் இடத்தைக் கொடுக்கும்.
விண்டோஸ் 8 சிஸ்டம், டேப்ளட் பிசி மற்றும் பெர்சனல் கணணி என இரு பிரிவுகளிலும் இயங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படுவதால், நிச்சயம் இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கை கொடுக்கும்.
மேலும் ஏற்கனவே வெளியான விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவிற்கு, விண்டோஸ் 8ன் மேம்பாடு கொண்ட அம்சங்களைக் கொண்டிருக்கப் போவதில்லை என்பதால் இதனை மக்கள் அவ்வளவாகச் சிறப்பாகப் பேசப் போவதில்லை.ஒரே ஒரு சிறப்பான அம்சம் என்னவெனில், அது மல்ட்டி டச் வசதி மட்டுமே.
எனவே டேப்ளட் பிசி பிரிவில் மைக்ரோசாப்ட் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தன் சிஸ்டம் இயங்கும் வகையில், டேப்ளட் பிசிக்கள் சந்தையில் வருவதற்குத் துணை புரிய வேண்டியதிருக்கும்.
இந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 2012 ஆம் ஆண்டு ஒரு சவாலான ஆண்டாக நிச்சயம் அமையும்.

புகைப்படங்களில் தேவையில்லாததை நீக்குவதற்கு

புகைப்பட கலைஞர்கள் சிரம்பட்டு எடுக்கும் புகைப்படங்களில் ஏதோ ஒரு குறை இருப்பின் அதனை ஒரு சிறிய மென்பொருள் கொண்டு நிவர்த்தி செய்யலாம்.
இந்த மென்பொருள் மூலம் புகைப்படங்களில் உள்ள திகதி மற்றும் உங்களுக்கு பிடித்தமான நிறத்தை மாற்றலாம்.
இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் Add Files மூலம் புகைப்படத்தை தெரிவு செய்யுங்கள்.
நீக்க விரும்பும் இடத்தை இதில் உள்ள Select மூலம் தெரிவு செய்து கொண்டு Remove கிளிக் செய்யுங்கள். அதன் பின் நீங்கள் குறிப்பிட்ட இடம் மறைந்து விடும்.
 

Blogroll

About