Monday, April 23, 2012

எந்த ஒரு இணைய தளத்தையும் இலகுவாக மாற்றியமைக்கலாம்


எந்த ஒரு இணைய தளத்தையும் இலகுவாக மாற்றியமைக்கலாம்

இன்றைய இணைய உலகில் ஜாவா (java) பல்வேறு வகையில் பயன்படுகிறது. நம்ம தினமும் எத்தனையோ இணையதளங்களில் உலாவிவி வருகின்றோம். அவற்றை நாம் எமக்கு ஏற்றால் போல் ஜாவாவின்(java) உதவியுடன் மாற்றி அமைக்கலாம். அதை எவ்வாறு செய்வது என்று இப்பதிவில் பார்ப்போம்.

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் கீழே உள்ள ஜாவா குரிய்யீட்டை (java Code)நகல் எடுத்து உங்கள் நோக்குனரில் (Browser) இணையத்தள முகவரி காணப்படும் இடத்தில் (address Bar) இடவேண்டும்.
javascript:document.body.contentEditable = ‘true’; document.designMode=’on’; void 0
இவ்வாறு செய்த பின் நீங்கள் உங்களுக்கு மாற்றி அமைக்க வேண்டிய பகுதிகளை எடிட் (edit) செய்து விட்டு ஒரு பிரதி (screenshot) ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். அனால் நீங்கள் செய்த மாற்றங்கள் அனைத்தும் நிரந்தரமானவை அல்ல.
சில நோக்குனர்களில்(Browser) இக் கோடை(code) பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. ஆகையால் கீழ் காணும் கோடை புக் மார்க் செய்து கோண்டீர்களே அனால் இலகுவாக பயன்படுத்தலாம். ( புக் மார்க்(Bookmark) செய்ய கீழ் உள்ள லிங்கை (link)உங்கள் ப்ரௌசெர்(Browser) அட்ரஸ் பாரில்(address Bar) இழுத்து கொண்டு சென்று விடவும்.)

Sample text

Thursday, April 19, 2012

முத்தான மூன்று கையடக்க DTP மென்பொருள்கள்

டிசைனராக பணிபுரியும் தோழி ஒருவர் Coreldraw மென்பொருள் வேலை செய்யவில்லை என்றும் அவசரமாக அதை பயன்படுத்த வழி இருக்கிறதா என்று என்னிடம் கேட்டார். நான் உடனடியாக Coreldraw வின் கையடக்க பதிப்பை (Portable Edition ) தரவிறக்கி கொடுத்தவுடன்
மகிழ்ந்தார். மேலும் நிற்காமல் DTP ( Desktop Publishing ) துறையில் பயன்படும் மூன்று மென்பொருள்களான Coreldraw, Photoshop, Pagemaker போன்றவற்றை கையடக்கமான வகையில் பயன்படுத்துவதற்கு ஏற்ப சுட்டிகளை தேடிப்பிடித்து விட்டேன். உங்களுக்கும் உபயோகப்படுமல்லவா?

இவற்றில் ஒரு வசதி உள்ளது. கையடக்க மென்பொருளை விரித்து
( Extract ) கணினியில் நிறுவத்தேவையில்லை. அப்படியே அதன் .Exe கோப்பை இயக்கி பயன்படுத்தலாம். எங்கு வேண்டுமானாலும் கொண்டு
சென்று பயன்படுத்தலாம். அவசரத்திற்கு கண்டிப்பாக பயன்படும். உங்கள் நண்பரின் கணினியில் photoshop இல்லாவிட்டாலும் உங்களிடம் உள்ள கோப்புகளை இயக்கி படங்களை பார்வை இடலாம். மாற்றங்கள் செய்யலாம்.

Corel Draw X3 ( 34 MB )


தரவிறக்கசுட்டி:
http://www.4shared.com/file/25523572/dedbf292/PORTABLE_CorelDRAW_X3_with_SP2.html


Adobe Photoshop CS4 ( 68 MB )

தரவிறக்கசுட்டி:
http://ezuploads.info/dll/jd39ky
Password : www.fullandfree.info

Adobe Pagemaker 7.02 (50 MB)



தரவிறக்கசுட்டி:
http://www.megaupload.com/?d=CGQWJ6YX

ஒரே கிளிக்கில் எல்லா பயன்பாடுகளையும் மூட...

நாம் கணினியை பயன்படுத்தும் போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருள்கள் அல்லது பயன்பாடுகளை திறந்து வைத்திருப்போம். திடிரென்று கணினியை அணைக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் என்ன செய்வோம்? ஒவ்வொரு பயன்பாடாக சென்று மூடிக்கொண்டிருப்போம். ஆனால் எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் மூடிவிட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.

இதற்கு தான் ஒரு மென்பொருள் உள்ளது. Close All என்ற இந்த மென்பொருள் கணினியில் நாம் திறந்து வைத்திருக்கும் அத்தனை மென்பொருள்களையும்ஒரே கிளிக்கில் ஒரே நேரத்தில் மூடுகிறது. இது அனைத்து மென்பொருள்களுக்கும் மூடு என்ற சிக்னலை அனுப்பி அதன் மூலம் மூடுகிறது. இது கணினியை அணைக்கும் நேரம் உபயோகமாக இருக்கும்.
இதை நிறுவத்தேவையில்லை. பென் டிரைவிலும் வைத்து பயன்படுத்தலாம். இதற்கு ஒரு குறுக்குவழி (Shortcut) ஒன்றை desktop or quick launch bar இல் ஏற்படுத்தி சுலபமாக பயன்படுத்தலாம்.

தரவிறக்கச்சுட்டி: http://www.ntwind.com/download/CloseAll.zip .
thanks to jeyakanthan.

Saturday, April 14, 2012

மாணவர்களுக்கு பயன்தரும் இணைய தளங்கள்


இன்று எம்மை தேடி அத்தனையும் எங்களின்
இருப்பிடத்துக்கே வந்து கொன்ன்டிருக்கிறது.
அன்று நாம் கல்வி பெற கல்லூரிகள், நுலகங்கள்
என தேடி செல்ல வேண்டி இருந்தது. இன்று அவ்வாறு
இல்லை இணையம் மூலம் அத்தனையும் உங்கள்
உங்களின் இல்லத்திலே பெறமுடியும்.




அந்த வகையில் மாணவர்களுக்கு பயன்தரும்
இணைய தளங்களை பட்டியலிடுகிறேன்.

1 . http://www.textbooksonline.tn.nic.in/ இதனை
தமிழ அரசின் கல்வி அமைச்சு இதனை உருவாக்கியுள்ளது .
இதிலே 12 ம் வகுப்பு வரை தமிழ் , அறிவியல் ,
கணக்கு என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன,


2 . http://www.alfy.com/ இதில் சிறுவர்களுக்கான
விளையாட்டுக்கள், மற்றும் நிறம்திட்டுதல்
வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன்
கற்றலை மேம்படுத்துகிறது. இந்த தளம் .
3 . http://www.coolmath4kids.com/ இந்த தளம்
குழந்தைகளின் கணித அறிவு ஆற்றலை
விளையாட்டுடன் கற்று தருகிறது.
http://kids.yahoo.com/இது குழந்தைகளுக்காக
யாஹூ நிறுவனத்தின் படைப்பாகும்.
5 . http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp இது

தினமலர் நாளிதழின் கல்விக்கான படைப்பாகும்
இதிலே மாணவர்களுக்கான தகவல்கள் குவிந்து
இருக்கின்றன .

6 . http://www.educationatlas.com/படிக்கும் திறனைச்

சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து
கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,
உங்களுடைய தனிப்பட்ட படிக்கும் திறன் குறித்து
அறிந்து கொள்ளுதல் அவற்றினை மேம்படுத்துதல்
போன்றவற்றினை இத்தளம் சிறப்பாக கூறுகிறது.
7 .http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm
ஆங்கில அறிவினை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்து
கொள்வதற்கான தளம்.
8. http://www.tamilnotes.com/ தமிழ் இலக்கண அறிவை வளர்த்து
கொள்வதற்கான இணையம்

போலி பிளாஷ் டிரைவுகளை கண்டுபிடிப்பது எப்படி?

256GB, 512GB, 640GB என மிகப்பெரிய அளவுகளில் USB பிளாஷ் டிரைவுகள் மலிவான விலையில் சந்தையில் கிடைத்தால் நாம் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிவிடுகிறோம். கணிணியில் இணைத்துப் பார்த்தால் அதுவும் 640GB USB Flash drive detected என பெருமையாக கூறிவிடுகின்றது. ஆனால் பிரச்சனையே இனிதான் ஆரம்பிக்கிறது. கோப்புகளை காப்பி செய்ய ஆரம்பித்தால் 2GB அல்லது 4GB-க்கு மேல் காப்பியாக திணறும், கடைசியில் இருக்கின்ற கோப்புகளை கரப்ட் செய்துவிட்டு டிரைவும் செத்துவிடும்.இது தான் போலி பிளாஷ் டிரைவுகளின் குணாதிசயம். இந்த போலி டிரைவுகளில் மறைவாக ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறிய புரோகிராம் அதை உங்கள் கணினிக்கு 640GB-யாக காண்பித்து பொய்சொல்லும்.ஆனால் நிஜத்தில் அங்கே 2GB-யோ அல்லது 4GB-யோ தான் இருக்கும். சீனாவிலிருந்து இது போன்ற போலி பிளாஷ் டிரைவுகள் உலகமெங்கும் இறக்குமதியாகின்றன. சோனி,கிங்ஸ்டன் என பிரபலமான பெயர்களில் இவை லோக்கல் சந்தைகளில் கிடைக்கின்றன. ஈபேயிலும் இவைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம தான் உசாரா இருக்க வேண்டியுள்ளது.நம்பத்தகுந்த நபர்களிடமிருந்து அல்லது நிறுவனங்களிடமிருந்து மட்டுமே டிரைவுகளை வாங்குவது நல்லது. மேற்சொன்ன கதை மெமரிகார்டுகளுக்கும் பொருந்தும்.அது சரி, உங்களிடம் ஏற்கனவே இருக்கும் USB பிளாஷ் டிரைவ் ஒரிஜினலா அல்லது போலியா என தெரிந்துகொள்வது எப்படி? H2testw என ஒரு இலவச மென்பொருளை நீங்கள் கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம். இதை உங்கள் கணிணியில் unzip செய்து டார்கெட்டாக உங்கள் USB பிளாஷ் டிரைவ் அல்லது மெமரிகார்டை காண்பித்து (உங்கள் டிரைவை empty ஆக்கினபின்) ஓடவிட்டால் அது சிறிது நேரம் கழித்து உங்கள் டிரைவின் லட்சணத்தை கூறிவிடும்.Test finished without errors என்றால் நீங்கள் ஏமாறவில்லை என அர்த்தம்.The media is likely to be defective எனச் சொன்னால் கண்ணன் ஏமாந்தான் என அர்த்தம்.
Download H2testw for free
Download link below
http://www.heise.de/ct/Redaktion/bo/downloads/h2testw_1.4.zip
Homepage link below
http://sosfakeflash.wordpress.com/2008/09/02/h2testw-14-gold-standard-in-

Sunday, January 15, 2012

2012ம் ஆண்டில் மைக்ரோசொப்டின் புதிய வரவுகள்

மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு கடந்தாண்டு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. ஏனெனில் டேப்ளட் மடிக்கணணி சந்தையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பு ஏதும் அறிமுகமாகாததால் பலரின் விமர்சனத்தை சந்திக்க நேர்ந்தது.
மேலும் விண்டோஸ் கைபேசி சரியாக மக்களை சென்றடையாத காரணத்தினாலும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில் மிகத் தாமதாமாக இறங்கிய காரணத்தினாலும் பலரின் விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் இந்நிறுவனத்தில் வருமானம் சிறிதும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தாண்டு மைக்ரோசொப்ட் நிறுவனத்திடமிருந்து பல புதுமைகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவற்றை நிறைவேற்றும் பணியில் தற்பொழுது மைக்ரோசொப்ட் செயல்பட்டு வருகிறது. பெரும் எதிர்பார்க்கப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளம் இந்தாண்டு அறிமுகமாகும்.
குறிப்பாக டேப்ளட் பிசிக்களில் இந்த சிஸ்டம் முற்றிலும் மாறுதலான ஓர் அனுபவத்தினைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். ஐபேட் சாதனத்திற்கு எதிரான போட்டியில் டேப்ளட் பிசி சந்தையில் இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஓர் இடத்தைக் கொடுக்கும்.
விண்டோஸ் 8 சிஸ்டம், டேப்ளட் பிசி மற்றும் பெர்சனல் கணணி என இரு பிரிவுகளிலும் இயங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படுவதால், நிச்சயம் இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கை கொடுக்கும்.
மேலும் ஏற்கனவே வெளியான விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவிற்கு, விண்டோஸ் 8ன் மேம்பாடு கொண்ட அம்சங்களைக் கொண்டிருக்கப் போவதில்லை என்பதால் இதனை மக்கள் அவ்வளவாகச் சிறப்பாகப் பேசப் போவதில்லை.ஒரே ஒரு சிறப்பான அம்சம் என்னவெனில், அது மல்ட்டி டச் வசதி மட்டுமே.
எனவே டேப்ளட் பிசி பிரிவில் மைக்ரோசாப்ட் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தன் சிஸ்டம் இயங்கும் வகையில், டேப்ளட் பிசிக்கள் சந்தையில் வருவதற்குத் துணை புரிய வேண்டியதிருக்கும்.
இந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 2012 ஆம் ஆண்டு ஒரு சவாலான ஆண்டாக நிச்சயம் அமையும்.

புகைப்படங்களில் தேவையில்லாததை நீக்குவதற்கு

புகைப்பட கலைஞர்கள் சிரம்பட்டு எடுக்கும் புகைப்படங்களில் ஏதோ ஒரு குறை இருப்பின் அதனை ஒரு சிறிய மென்பொருள் கொண்டு நிவர்த்தி செய்யலாம்.
இந்த மென்பொருள் மூலம் புகைப்படங்களில் உள்ள திகதி மற்றும் உங்களுக்கு பிடித்தமான நிறத்தை மாற்றலாம்.
இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் Add Files மூலம் புகைப்படத்தை தெரிவு செய்யுங்கள்.
நீக்க விரும்பும் இடத்தை இதில் உள்ள Select மூலம் தெரிவு செய்து கொண்டு Remove கிளிக் செய்யுங்கள். அதன் பின் நீங்கள் குறிப்பிட்ட இடம் மறைந்து விடும்.
 

Blogroll

About