Saturday, October 13, 2012

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்


தாங்கள் நல்லகாரியங்களிற்கு மற்றும் சாதகக குறிப்பு எழுத தினம் சோதிடர்களை நாடுபவர்களா? தங்கள் பணத்தினையும் நேரத்தினையும் மீதப்படுத்த இதோ சோதிடர் மென்பொருளிள் வந்துவிட்டார்.உங்களிற்கு தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம். தேவையானது தங்களின் பெயர் ,பிறந்த திகதி மற்றும் பிறந்த
நேரத்தினை சரியாகக் கொடுத்தோமாயின் எமது முழு சாதகக் குறிப்பு, கணிப்புக்கள் மற்றும் பிறந்ததில் இருந்து நடக்கப்போவது வரை அனைத்தையும் திகதிகளுடன் பெறலாம். புகழ் பெற்ற மலையாள சோதிடர்களின் உதவியுடன் இவ் மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.
சோதிட நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக ஓர் சிறந்த மென்பொருள் ஆகும். அனைத்தும் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றது. பிரின்ட் பண்னுவதற்கும் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சரி ஒருக்க முயற்சி செய்து பாருங்களன்.
இவ் மென்பொருளை எவ்வாறு உபயோகிப்பது?



1.

கீழுள்ள டவுன்லோட் லிங்கில் மென்பொருளை பதிவறக்கிக் கொள்ளவும்.


2.



பின்னர் Unzip பண்ணிக் கொள்ளவும்.

3.

Folderஐ உங்களிற்கு தேவையான இடத்தில் Copy பண்ணி Paste பண்ணவும். இன்ரோல் பண்ணவேண்டிய அவசியமில்லை.


4.


பின்னர் கட்டாயமாக தாங்கள் செய்ய வேண்டியது. Down.ttf எனும் Font பிரிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதனை copy பண்ணி Control panel சென்று Font Folderல் paste பண்ணவும். OR Right click DOWN.ttf – Click Install

5.

பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது Predict.exe என்பதை கிளிக் செய்து சாதகம் கணிக்கப்பட் வேண்டியவரின் விபரங்களை வழங்கிய பின் OK பண்ணினால் சரி. சாதக முழு விபரங்களும் கிடைக்கும்.

Download Astro

மென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம் செய்ய

நாம் இனையத்தில் வீடியோக்களை பார்க்க அதிகமாக பயன்படுத்தும் தளம்YouTubeதளம்.அதில் வீடீயோவை பார்ப்போம் அந்த வீடியோ நமக்கு பிடித்தால் அதை கணிணியில் தறவிறக்கி வைத்தால் நல்லாஇருக்கும் என்று நினைப்போம்.ஆனால் அங்கு Download Link இருக்காது.அதற்காக நாம் ஒரு மென்பொருளை நிறுவி Download பன்னுவோம்.அந்த மென்பொருள் சில நேரம்Download பன்ன முடியாது என்று Error காட்டும்.சரி இனி இந்த வீடீயோவை Download பண்ண முடியாது என்று விட்டுவிடுவோம்.ஆனால் இந்த YouTube வீடியோக்களை இனையத்தில் இருந்தே Download பன்னலாம்.
இந்த வசதியை நமக்கு வழங்கும் தளம்: KEEP VID தளம்.


தளத்தை உபயோகிக்கும் முறை:

  • இந்த தளத்தை உபயோகிக்க கண்ணினியில் JAVA மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். நிறுவவில்லை என்றால் இந்தசுட்டியில் சென்று நிறுவிக்கொள்ளுங்கள்.


  • பின் அங்குள்ள Text Box-ல் உங்களுக்கான வீடீயோ URL-ஐகொடுத்துDownload-பொத்தானை அழுத்தவும்.


  • அடுத்து வரும் பக்கத்தில் பின்வரும் படத்தில் உள்ளது போல் இருக்கும்




  • படத்தில் குறிப்பிட்டுள்ளது போல் Allways Run On this Site என்று கொடுங்கள்.


  • இப்போது உங்கள் Video-க்கான Download Option கிடைக்கும்.
  • இங்கு 8 விதமான Format-களில் Download பன்னுகிறOptionகிடைக்கும்.Mobile-க்கு ஏற்ற 3GP Format-டிலும் Download பண்ணலாம்.

Damage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற

நாம் காப்பி செய்யும் சிடிகளில்  அந்த சிடியில் உள்ள தகவல்களை எழுதிவைப்போம். சில சமயம் எழுத மறந்துவிடுவோம்.சில நாட்கள் கழித்து சிடியை எடுத்து பார்க்கும் சமயம் டேமேஜ் (Damage) ஆகியிருக்கும்.எதில்போட்டாலும் சிடி ஓப்பன் ஆகாது. அதில் என்ன தகவல் உள்ளது என்பதும் நமக்கு தெரியாது. அந்த சிடியை வைத்துக்கொள்வதாக இல்லை குப்பையில் போட்டுவிடுவதா என குழப்பமாகும். குப்பையில போடும் முன்பு அதை செக்செய்து போடுவது நல்லது. சிலசமயம் அதில முக்கியமான தகவல்கள் இருக்க்கூடும். அதை சிடி டிரைவில போட்டால் ஒப்பன் ஆகாது. அந்த மாதிரியான சமயத்தில் நமக்கு கை கொடுக்க வருவது இந்த சாப்ட்வேர். உயிருக்கு போராடுபவருக்கு பெரிய டாக்டர் கடைசியாக முயற்சிசெய்வதில்லையா. அதுபோல் இந்த சாப்ட்வேர் மூலம் கடைசியாக முயற்சிசெய்து இதில உள்ள தகவல்களை மீட்டு எடுக்கலாம். இதிலும் தகவலை எடுக்க முடியாவிட்டால் அவ்வளவுதான்.மனதை தேற்றிக்கொண்டு சிடியை தூக்கி போட்டுவிடுங்கள்.இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்கள் கணிணியில் இன்ஸ்டால்செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இப்போது உங்களுக்கு சிடியை டிரைவில் போடசொல்லி தகவல் வரும் கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இப்போது சிடி டிரைவில் சிடியை போட்டு ஓ.கே.தாருங்கள். இப்போது மெயின் விண்டோவில் உள்ள சிடி ஐகானை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நெக்ஸ்ட் கொடுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில நீங்கள் சேமிக்க விரும்பம் போல்டரை தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். அதில பைல்கள் சிடியிலிருந்து டிரைவின் போல்டருக்கு காப்பி ஆகும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இறுதியாக பைல்கள் காப்பி ஆகிவிட்டதை காணலாம்.இதுதவிர்த்து நீங்கள் சிடியில ஒரே ஓரு பைலை மட்டும் காப்பி செய்வதானாலும் காப்பி செய்யலாம். மெயின்விண்டோவில் இரண்டாவதாக உள்ள ஐ –கானை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
எந்த பைல்வேண்டுமோ அதை மட்டும் தேர்வு செய்து அதைமட்டும் வேண்டிய போல்டரில புதியதாக பெயர் கொடுத்து காப்பி செய்யலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
.
சிறிது நேரம் கழித்து  நீங்கள் காப்பி செய்த போல்டரில் பார்த்தால் உங்கள் சிடியில் உள்ள தகவலானது ஜம்முனு அங்கு அமர்ந்திருக்கும். பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள்

கணினியோடு வேலை செய்யும் போது நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை !



பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர்.

* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத 'குஷன்' நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

* முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்�ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.


* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். 'ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்' ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.


* உடல் உழைப்புக் குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.


* இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்�ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

Wednesday, September 26, 2012

மைக்ரோசாப்டின் வரலாறு 1975 முதல்..


ஒரு நல்ல செய்தியைக் கூறுகிறேன் – மைக்ரோசாப்ட் விரும்பிகளே!

Microsoft நிறுவனத்தின் வரலாற்றுச் சரித்திரத்தை அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்பவர்களே!
இப்போது Channel9 என்கிற இணையத் தளத்தில் “The History of Microsoft” என்கிற ஒரு காணொளித்தொடர் நிகழ்ச்சியை நீங்கள் காணலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இது வரையில் கடந்து வந்த பாதைகளைப் பற்றியும், தாண்டி வந்த தடைகளைப் பற்றியும் இந்தக் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Bill Gates மற்றும் Paul Allen ஆகிய இருவரும் சேர்ந்து எப்படியெல்லாம் வெற்றிநடை போட்டனர் என்பதை இந்தப் படம் விவரிக்கும்.
இது வரை வேறு எங்கும் காண இயலாத மைக்ரோசாப்ட் பற்றிய பல புகைப்படங்களைக் காணவிருக்கிறீர்கள்.
1975ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டுகளாக விவரிக்கப்பட்டுள்ளது

சுட்டி : http://channel9.msdn.com/shows/History/


பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம் ?

இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டைகள் வைத்துருப்பார்கள் அல்லது கடைசி ஒரு வங்கியின் ATM அட்டையாவது இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக பயன்படுத்துவதே இன்று பெரும் சவாலாக உள்ளது.
இணைய மூலம் பொருட்கள் வாங்குவது (online shopping) மற்றும் இணைய வங்கிச்சேவை (net banking) என புதிய தொழிநுட்ப்ப வசதிகளோடு நாம் வாழவேண்டிய கட்டாயச் சூழல் இது. ஆனால் இவற்றையெல்லாம் கையாழ்வதட்க்கு மின்னஞ்சல் ஒன்று அவசியம் மின்னஞ்சல் என்று வந்துவிட்டால் அதன் கடவுச்சொல் பாதுகாப்பானதா? என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா? என்பது மிக மிக முக்கியம், இல்லையென்றால் எல்லாம் அதோ கெதிதான் உழைப்பவன் யாரோ சும்மா உட்க்காந்து சாப்பிடுபவன் யாரோ என்று நம் கதை வராமல் பார்ப்பது நம் கையில்த்தான் உள்ளது.
சரி பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்!
நமது கடவுச்சொல் திருடுபோவது நமது கையில்தான் இருக்கிறது எனது கடவுச் சொல்லைக் கண்டுபிடியுங்கள்’ பார்க்கலாம் என்று உங்களிடம் சொன்னால் முதலில் என்ன செய்வீர்கள்? எனது பெயர், என் அப்பா பெயர், என் ஊர், என் வயது அல்லது 123456 , abcdef இந்த மாதிரிதானே முயற்சி செய்வீர்கள்? இதுபோன்ற பெயர்களை கொண்டு கடவுச்சொல் உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்த்துக்கொள்ளவேண்டும் .
இதுமாதிரி அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன அதில் இதுபோன்ற கடவுச்சொல் சேமித்து வைக்கும் கோப்பைக் கொடுத்தால் போதும் உடனே உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடித்துவிடும்.
அடுத்து நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யும்போது யாரும் பின்னால் இருந்து பார்க்கின்றனரா? என உறுதி செய்துகொள்ளுங்கள் பக்கத்தில் யாரும் இருந்தால் கடவுச்சொல் இடுவதை நிறுத்துங்கள் பல இடங்களில் 6 இலக்கமே போதும் எனச் சொல்வார்கள் ஆனால் நீங்கள் நீளமான கடவுச்சொல்லை அமைத்துக்கொள்ளுங்கள் கடவுச்சொல் இடும் கட்டம் தாண்டியும் நீளமாக கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளலாம்.
ஸ்பைவேர்,மால்வேர் போன்ற வைரஸ்கள் நமது கணினியில் இருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச் சந்தர்ப்பத்தில் நமது கடவுச்சொல்லும் போக வாய்ப்புண்டு.எனவே நீங்கள் கணினித்திரையின் கீழ்ப் பக்கம் வலது சொடுக்கி Task Manager திறந்து பாருங்கள் உங்களுக்குத் தெரியாத ஏதேனும் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதா? என்று இம்மாதிரி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்பவனவற்றை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது சேதம் விளைவிப்பது என்பது ஒரு சிலரால் மட்டும்தான் முடியும் எதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய் சொல்லக் கூடும் அதற்கு Hack மற்றும் Crack போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும் எனவே மற்றவர் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும்.
முடிந்தவரை ஜிமெயில் , யாஹூ மற்றும் கொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை (auto login) தவிருங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் அல்லது கடவுச்சொல் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும்போது லாக்கவுட் செய்து வெளியேறுங்கள்.
அடுத்து முக்கியமாக நாம் கடவுச்சொல் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துகளுக்கு இடையிடையே சிம்போல் (symbol) :- ! . , * – + `~ @ # $ % ^ & ( ) _ = : ; \ / போன்றவைகளையும் உள்ளடக்கி கடினமான கடவுச் சொல்லாக தேர்வு செய்வது மிக மிக பாதுகாப்பானது.

உசைன் போல்டின் வேகத்தை மிஞ்சும் ரோபோ சிறுத்தை தயாரிப்பு



உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும்விட மிக வேகமாக ஓடக்கூடிய ரோபோ சிறுத்தையை அமெரிக்க இராணுவ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பெண்டகனின் நிதியொதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட இந்த நான்கு கால்களையுடைய ரோபோ இயந்திரமானது, மணித்தியாலத்திற்கு 28 மைல்கள் வேகத்தில் ஓடியுள்ளது.
இந்த சீட்டா ரோபோவின் வேகமானது, உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும் விட அதிகமானதாகும். உசைன்போல்ட் 2009 ஆம் ஆண்டில் நூறு மீற்றர் தூரத்தை 27.8 விநாடிகளில் ஓடி புதிய உலக சாதனையை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி இயந்திரமானது போஸ்டன் டைனமிக்ஸினால் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் நிறுவனத்தினால் வெவ்வேறு வகையிலான இராணுவ ரோபோக்களின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் நிதிகளை கொண்டு ரோபோக்களை வடிவமைக்கும் செயற்பாட்டில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
‘மணித்தியாலத்திற்கு 28 மைல் வேகத்தை அடைவது என்பது மிகவும் சவால்மிக்க குறிக்கோளாகும். இதற்காக நான் எனது ரோபோ குழுவினரை பாராட்டுகிறேன்’ என ரோபோவியல் விஞ்ஞானியான டாக்டர் அல்பிரட் றிசி தெரிவித்துள்ளார்.
‘இந்த இயந்திரமானது வேகமாக ஓடும்போது அதனது வெளிப்புறப் பகுதிகள் சுதந்திரமாக இயங்க வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். இதற்காக ‘வைல்ட் கெட்’ என்ற பெயரில், திறந்த வெளியில் ஓடக்கூடிய இயந்திரத்தை உருவாக்கி வருகிறோம். இது அடுத்த வருடத்தின் முன்பகுதியில் பரிசோதிக்கப்படும்’ என அவர் கூறினார்.
எதிர்காலத்தில் இந்த இயந்திரமானது அவசர நிலைமைகளிலான பதிலளிப்பு, மனிதாபிமான உதவிகள், மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பங்களிப்புச் செய்யும் என அமெரிக்க படையினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இதேவேளை, மனிதனைவிட வேமாக ஓடக்கூடிய இவ் இயந்திரத்தின்மூலம், யுத்த களங்களில் அதிவேக கொலையாளியாக உருவாகலாம் என ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ இயந்திரத்துறை பேராசிரியரான நோயல் ஷார்க்கி தெரிவித்துள்ளார்.
 

Blogroll

About