Wednesday, July 24, 2013

உங்கள் கணினியில் உள்ள application களை lock செய்ய[ மற்றவர்களிடம் இருந்து ]

உங்கள் கணினி மற்றவர்களால் பயன்படுத்தப்படும் மற்றும் உங்கள் கணினியில் இன்னும் தனியுரிமை பெற அல்லது விண்டோஸ் பயன்பாடு அணுகலை தடுக்க வேண்டும் என்றால், அதை smartX எனும்  நிறுவனம் AppLock என்று ஒரு இலவச கருவியை பயன்படுத்தி பயன்பாடுகளை பூட்ட வழிவகுக்கிறது. இந்த கருவி உங்கள் தனியுரிமை பாதுகாப்பாக வைத்து மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு பிடித்த application களை  பாதுகாக்க உதவுகிறது. 



How to Lock Programs in Windows



1. Go to AppLocker website and Register for an account to download the tool


2. After you click download, extract the .zip file and install AppLocker
3. Launch AppLocker from your desktop, it will list all Windows Applications : Calculator, Internet Explorer, MS Paint and many others.

4. Just Select the apps you want to lock and click Save

Note-1: The tool will list only common programs and default windows apps, to add your programs then follow the steps 5 and 6:

5. To add your own programs, click Configure.. , in Caption type a name for the app, in Executable File Name type the .exe file name (e.g: PhotoshopCS5.exe )




6. Click Add then Ok, check your program from the list and click Save


Note-2: When you run the locked program it will show an error similar to the below image:

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றவேண்டுமா

அண்மையில் Mobile Number Portability எனும் வசதி TRAI கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.

முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.

இப்போது உங்களுக்கு 1901 எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.

தங்கள் அருகாமையில் இருக்கும் எந்த ஒரு புதிய மொபைல் சேவை நிறுவன மையம் உள்ளதோ(நீங்கள் விரும்பும் ஏதேனும் Ex: Airtel, Vodafone, Docomo, Reliance) அங்கு செல்லவும்.

அவர்கள் தரும் சேவை மாற்று படிவத்தில் பின் வரும் தகவல்களைக் கொடுக்கவும்.
தற்போதைய மொபைல் எண்.
தற்போதைய மொபைல் சேவை நிறுவனம்.
UPC code

தங்களின் முகவரி சான்று, அடையாளச் சான்று, சுய கையோப்பமிட்ட புகைப்படம் மற்றும் கடந்த மாதத்தின் பில்(If it is postpaid). போன்றவற்றையும் கொடுக்கவும்.

அவர்கள் உங்களுக்கு புதிய SIM அட்டை கொடுப்பார்கள். சில நிறுவனம் இந்த புதிய SIM cardக் கென கட்டணம் கேட்டாலும் கேட்பார்கள். (Rs. 50 to Rs. 100)

உங்களின் புதிய நிறுவனம் பழைய நிறுவனத்திற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி நீங்கள் கட்சி மாறி விட்டதாக தகவல் கொடுப்பார்கள். நீங்கள் அந்த பழைய SIM கார்டை எந்தத் தேதி வரை பயன்படுத்தலாம் எனும் தகவலும் உங்களுக்கு கொடுக்கப்படும்.

அதே நாள் அல்லது அடுத்த நாள் இரவு 12 மணி முதல் 5 மணிக்குள் உங்களின் மொபைல் சேவை 2 மணி நேரம் தூண்டிக்கப்படும்.

இப்போது நீங்கள் உங்களின் புதிய மொபைல் நிறுவன வாடிக்கையாளராக மாறிவிட்டீர்கள்.

Sim Cardல் அழிந்து போன contact களை RECOVER செய்ய

GSM Phoneகளின் Sim Cardல் குறிப்பிடத்தக்களவு தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய வசதி உண்டு. நாம் எமது Simல் சேமித்த Phone Book Numbers, Call History மற்றும் SMS (Phonebook,sms,call history) போன்றவற்றை நாம் அழித்திருந்தால் Sim Card Recovery 3.0 இவ் மென்பொருளை உபயோகிப்பதன் மூலம் நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம்.


இவ் மென்பொருளை நாம் விலை கொடுத்து வாங்கினால் நாம் சிம் வாங்கியதில் இருந்து அழித்த அனைத்து தகவல்களையும் பெறலாம். Trail Virsion னை நாம் இலவசமாக உபயோகிக்கலாம். இதன் மூலம் நாம் கடைசியாக அழித்த இரு தகவல்களினை மாத்திரம் மீட்கலாம்.


மென்பொருளை பதிவிறக்கம் செய்ய

உங்கள் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழைய

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள் நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.


கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.

இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம்.

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

மென் பொருளை தரவிறக்கம செய்ய download

laptopஐ பாதுகாக்க வழிமுறைகள்

1.  மடிகணினியை  பயணம் செய்யும் போது  அதிக நேரம் பயன்படுத்த கூடாது .
2.  POWER  DISCHARGE  ஆனவுடன் கணினியில் இருந்து LOW BATTERY என்ற WARING செய்தி கிடைத்தவுடன் பின்புதான் நீங்கள் கணினிக்கு CHAGRE செய்ய வேண்டும் .
3. ORINIGAL CHARGER  ரை  பயன்படுத்துவது நல்லது.

4. சிறு பிரச்சனை ஏற்ப்பட்டால் நாமாகவே மடிகணினியை கலட்டி பார்ப்பது மிகவும் தவறு .
5. கணினியில் இருந்து   வெப்பம் சரிவர வெளியேற வேண்டும் அல்லவா !அதனால் மடி கணினியை   சமம்மான இடத்தில்
பயன்படுத்தவேண்டும் .
6. அதிக நேரம் நம் மடியில் மடிகணினியை பயன்படுத்த கூடாது.(தோள் பாதிப்பு வரலாம்)
7. மடிகணினிக்கு ஏற்ற SAFETY பேக் தேவை.
8. முன்று மாதத்துக்கு ஒரு முறை கணினியில் உள்ள இயங்குதளத்தை மாற்றுவது நல்லது .
9.  அடிக்கடி ஒரு மடிகணினியில் இருந்து மற்றோர் மடிகணினிக்கு  BATTERY யை மாற்றி கொள்ளாமல் இருந்தால் நல்லது
10. மடி கணினி காணமல் போய்விடலாம் அதனால் மடி கணினியின் SEIRAL NUMBER ரை குறித்து கொள்ளவேண்டும்.
11. நீங்கள் மடிக்கணியை சில நாள்கள் பயன்படுத்த முடியாமல் சுழில்நிலை ஏற்ப்பட்டால் (அதாவது வெளியூர் சென்றால்) மடிகணினியில் இருந்து  BATTERY யை தனியாக கலட்டிவைக்கவேண்டும்

Monday, June 3, 2013

யூ டியூப் வீடியோக்களை இடையூறு இன்றி தொடர்ச்சியாக பார்ப்பது எப்படி?

பாடல்களுடன் விடியோ துண்டுப் படங்கள், எந்தப் பொருள் குறித் தும் தகவல்களுடன் கிடைக்கும் காணொ ளிப் படங்கள் ஆகியவற்றை லட்சக்கணக் கில் கொண்டு இயங்கும் தளம் யு ட்யூப் தளமாகும். இதனைப் பார்த்து ரசிக்காத, தகவல் தேடாத கம்ப்யூட்டர் பயனாளர் களே இல்லை எனலாம். ஆனால், இந்த யு ட்யூப் வீடியோ படங்களை நாம் காண்கையில், இடை இடையே, அந்த படக்காட்சி நம் கம்ப்யூட்டரில் பெறப்பட்டு இயங்க சிறிது நேரம்ஆகலாம்.
இது வீடியோ படத்தினை நாம் தொட ர்ந்து முழுமையாக ரசிப்பதில் இடையூறாக இருக்கிறது. இந்த இடர்ப்பாடினை த் தீர்க்க இயலாதா? அதற்கான வழிகள் எவை என்று எண்ணாத ரசிகர்கள் இல்லை. அக்கோணத்தில் இந்தப் பிரச்னையை அணுகியபோது நமக்குக் கிடைத்த சில தீர்வுகளை இங்கு காணலாம்.
1. அதிவேக இன்டர்நெட் தொடர்பு:
நல்ல வேகத்துடன் இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் தொடர்புதான், வீடியோ படத்தினைத் தொடர்ந்து ஸ்ட்ரீமிங் செய்திட உதவும். மெதுவான வேகத்தில் நம் இன்டர்நெட் இணைப்பு இருந் தால், நிச்சயம், வீடியோ படம் இடை இடையே நிறுத்தப்பட்டு, பின் ஸ்ட்ரீம் ஆன பின்னரே கிடைக்கும். எனவே, கூடுதல் வேகத்துடனான இன்டர்நெட் இணைப்பு இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் ஒரு தீர்வாகும்.
2. நிறுத்தி இயக்கு:
அடிக்கடி யு ட்யூப் வீடியோ படங்களைக் காண்பவர்கள், இந்த பிரச்னைக்குத் தீர்வாக, ஒரு குறுக்கு வழியைக் கையாள்வார்கள். இத னை ‘pause and play’ ட்ரிக் என அழைக் கலாம். வீடியோ படம் இயங்கத் தொடங்கியவுடன், பிளே பட்ட னை மறுபடியும் அழுத்த வேண்டும். இப்போது வீடியோ இயக்கம் தற்கா லிகமாக நிறுத்தப்படும். அப்போது, ஒரு சிகப்பு பட்டை கொஞ்சம் கொஞ் சமாக நீண்டு கொண்டு செல்வதனைப் பார்க்கலாம். உங்கள் கம்ப்யூ ட்டரில், அந்த வீடியோ படம் சேகரித்துப் பதியப்படுவதனை இந்த பார் ஓட்டம் காட்டுகிறது. இது வலது மூலை வரை சென்று நின்ற பின் னர், மீண் டும் பிளே பட்டனை அழுத்தினால், வீடியோ படம் எந்தவித இடை நிறுத்தமும் இல்லாமல் இயங்கத் தொடங்கும். 
3. அதிக இணைய சந்தடி இல்லாத நேரம்:
இணையப் பயன்பாட்டினை அனைவரும் மேற்கொள்ளும் நேரங்களில், எத்தகைய இணைப்பு இருந் தாலும், நமக்குக் கிடைக்கும் இணைப்பின் வேகம், சற்றுக் குறைவாகவே இருக்கும். எனவே, வீடியோ படங்களைக் காண்பத ற்கு அது உகந்த நேரமாக இருக்கா து. எனவே, சிலர் அதிகாலை, உச்சிவேளை மற்றும் பின் இரவு நேரங்களில் வீடியோ படக் காட்சி யைக் காண விரும்புவார்கள். ஏனென்றா ல், இன்டர்நெட் பயன்பாடு குறைவாக இருக்கும் நேரம் என்பதால், வீடியோ ஸ்ட்ரீமிங் விரைவாக இருக்கும்.
4. வீடியோ ஆக்ஸிலரேட்டர்:
ஒரு சிலருக்கு Speedbit Video Accelerator போன்ற புரோகிராம்கள் இந்த வகையில் கை கொடுக்கும். இது உங்கள் பிரவுசருடன், புரோ கிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கி றது. இந்த புரோகிராம், வீடியோ பைல் தேக்கப்பட்டு கிடைப்பதில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்கிறது. யு ட்யூப் மட்டுமின்றி, DailyMotion, Facebook, CNN போன்ற அனை த்து தளங்களின் வீடியோக்களையும் விரைவாகத் தொய்வின்றி இற க்கிக் காண உதவுகிறது. இந்த புரோகிரா மின் இலவச பதிப்பு அனைவருக்கு மான தேவையை நிறைவேற்றும். ஆனால், உறுதியான விரைவான இயக்கத்தை விரும்பு பவர்கள், கட்டணம் செலுத்தி இந்த புரோ கிராமினைப் பெற்று இயக்கலாம்.
5. பட தன்மையை செட் செய்தல்:
பல வீடியோ படங்கள், நாம் காணும் வீடியோ படத்தின் ரெசல்யூச னை செட் செய்திடும் வழிகளைத் தரு கின்றன. அதிக ரெசல்யூசனை செட் செய்தால், வீடியோ காட்சி தெளிவாக வும், காண்பதற்கு சுகமா கவும் இருக் கும். ஆனால், ஸ்ட்ரீமிங் வேகமாகக் கிடைக்காது. எனவே, இந்த செட்டிங் ஸை, ரெசல்யூசன் அளவினைக் குறை வாக செட் செய்தால், ஸ்ட்ரீமிங் பிரச் னை எழாமல் இருக்கும். பிளேயரின் வல து மூலையில் ரெசல்யூசன் எண் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்து, இன்னும் என்ன ஆப்ஷன்ஸ் தரப்பட்டுள்ளது எனப் பார்த்து, வீடியோ ஸ்ட்ரீமிங்கை தேவையான அளவில் இருக்கும் வகையில் செட் செய்திடலாம். 
6. குறைவான லோட் இருப்பது நல்லது:
வீடியோ பார்க்க ஆசைப்பட்டால், அதே நேரத்தில் பிற புரோகிராம் கள் இயங்காமல் இருப்பது, வீடியோ படத்தின் ஸ்ட்ரீமிங்கை விரை வு படுத்தும். மற்ற டேப் விண்டோக்களில் இயங்கும் ஆன்லைன் கேம்ஸ், பெரிய பைல் தரவிற க்கம் போன்ற இன்டர்நெட் செயல்பாடு கள், வீடியோ படக் காட்சி தொடர்ந்து பெறுவதில் இடையூறு செய் திடும். 
மேலே தரப்பட்டுள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒரு வழிமுறைகூட, சிலவேளை களில் யு ட்யூப் வீடியோக்களை இடையூ றின்றி உங்களுக்குத் தரலாம். இந்த வழி கள் அனைத்தையுமே முயற்சி செய்து பார்த்து, உங்களுக்கு உதவி டும் வழியினைத் தேர்ந்தெடுத்து பின்பற்றவும்.

Friday, January 25, 2013

கணினி SPEED ஆக அழகிய மென்பொருள்



உங்கள் கணினி மெதுவாக இயங்குகிறதா உங்கள் கணினி ஸ்பீட் ஆக வேண்டுமா சில கணினிகள் மெதுவாக இயங்கும்.சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும்.அதனாலேயே கணினி வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை.ஆனால் இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட
ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC இதோ இந்த SPEED UP MY PC மென்பொருளின் முகப்பு

  • இதை உங்கள் கணினியில் நிறுவினால் மெதுவான கணினியும் வேகம் பெறும்.
  • இந்த SPEED UP MY PC மென்பொருளை தரவிறக்க சுட்டி
 

Blogroll

About