Wednesday, October 17, 2012

சர்ச் என்ஜின்



இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும்.
இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.
அத்தளம் www.soovle.com
இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது.
இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keywordகொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.
மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்ததொரு தெரிவாகும்.

வன்தட்டில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய


அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏரர் செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் எரர் செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற எரர் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து, Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, எரர் செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். எரர் செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த எரர் செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்

Saturday, October 13, 2012

இலவச அவஸ்ட் ஆன்ட்டி வைரசின் புதிய பதிப்பு - AVAST 7 BETA


பல்வேறுபட்ட ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள் பாவனையில் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் பயன்படுத்தப்படும் முன்னணி ஆன்ட்டி வைரஸ் மென்பொருளாகும். இந்த ஆன்ட்டி வைரசின் புதிய பதிப்பு அவஸ்ட் 7 பீட்டா தற்போது வெளியாகியுள்ளது.



இந்த மென்பொருளின் சிறப்பு
  1. ஆன்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அளிக்கின்றது.
  2. கணினியில் புதிய வைரஸ்களை நுழைய விடாமல் தடுத்து அளிக்கின்றது .
  3. வேகமாக பைல்களை ஸ்கேன் செய்யும் வசதி
புதிய பதிப்பின் மூலம் உலாவி பாதுகாப்பு மேம்படுத்தல்கள் ,FILE REB வசதி , SANDBOX மற்றும் AUTOSANDBOX மேம்படுத்தல் வசதிகளுடன் மேலும் பல சிறப்புகளை கொண்டு வெளிவந்துள்ளது.


விண்டோஸ் 8 PREVIEW தளத்தில் இயங்கும் தன்மை கொண்டது .

தரவிறக்கம் செய்ய AVAST 7 BETA

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்


தாங்கள் நல்லகாரியங்களிற்கு மற்றும் சாதகக குறிப்பு எழுத தினம் சோதிடர்களை நாடுபவர்களா? தங்கள் பணத்தினையும் நேரத்தினையும் மீதப்படுத்த இதோ சோதிடர் மென்பொருளிள் வந்துவிட்டார்.உங்களிற்கு தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம். தேவையானது தங்களின் பெயர் ,பிறந்த திகதி மற்றும் பிறந்த
நேரத்தினை சரியாகக் கொடுத்தோமாயின் எமது முழு சாதகக் குறிப்பு, கணிப்புக்கள் மற்றும் பிறந்ததில் இருந்து நடக்கப்போவது வரை அனைத்தையும் திகதிகளுடன் பெறலாம். புகழ் பெற்ற மலையாள சோதிடர்களின் உதவியுடன் இவ் மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.
சோதிட நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக ஓர் சிறந்த மென்பொருள் ஆகும். அனைத்தும் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றது. பிரின்ட் பண்னுவதற்கும் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சரி ஒருக்க முயற்சி செய்து பாருங்களன்.
இவ் மென்பொருளை எவ்வாறு உபயோகிப்பது?



1.

கீழுள்ள டவுன்லோட் லிங்கில் மென்பொருளை பதிவறக்கிக் கொள்ளவும்.


2.



பின்னர் Unzip பண்ணிக் கொள்ளவும்.

3.

Folderஐ உங்களிற்கு தேவையான இடத்தில் Copy பண்ணி Paste பண்ணவும். இன்ரோல் பண்ணவேண்டிய அவசியமில்லை.


4.


பின்னர் கட்டாயமாக தாங்கள் செய்ய வேண்டியது. Down.ttf எனும் Font பிரிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதனை copy பண்ணி Control panel சென்று Font Folderல் paste பண்ணவும். OR Right click DOWN.ttf – Click Install

5.

பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது Predict.exe என்பதை கிளிக் செய்து சாதகம் கணிக்கப்பட் வேண்டியவரின் விபரங்களை வழங்கிய பின் OK பண்ணினால் சரி. சாதக முழு விபரங்களும் கிடைக்கும்.

Download Astro

மென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம் செய்ய

நாம் இனையத்தில் வீடியோக்களை பார்க்க அதிகமாக பயன்படுத்தும் தளம்YouTubeதளம்.அதில் வீடீயோவை பார்ப்போம் அந்த வீடியோ நமக்கு பிடித்தால் அதை கணிணியில் தறவிறக்கி வைத்தால் நல்லாஇருக்கும் என்று நினைப்போம்.ஆனால் அங்கு Download Link இருக்காது.அதற்காக நாம் ஒரு மென்பொருளை நிறுவி Download பன்னுவோம்.அந்த மென்பொருள் சில நேரம்Download பன்ன முடியாது என்று Error காட்டும்.சரி இனி இந்த வீடீயோவை Download பண்ண முடியாது என்று விட்டுவிடுவோம்.ஆனால் இந்த YouTube வீடியோக்களை இனையத்தில் இருந்தே Download பன்னலாம்.
இந்த வசதியை நமக்கு வழங்கும் தளம்: KEEP VID தளம்.


தளத்தை உபயோகிக்கும் முறை:

  • இந்த தளத்தை உபயோகிக்க கண்ணினியில் JAVA மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். நிறுவவில்லை என்றால் இந்தசுட்டியில் சென்று நிறுவிக்கொள்ளுங்கள்.


  • பின் அங்குள்ள Text Box-ல் உங்களுக்கான வீடீயோ URL-ஐகொடுத்துDownload-பொத்தானை அழுத்தவும்.


  • அடுத்து வரும் பக்கத்தில் பின்வரும் படத்தில் உள்ளது போல் இருக்கும்




  • படத்தில் குறிப்பிட்டுள்ளது போல் Allways Run On this Site என்று கொடுங்கள்.


  • இப்போது உங்கள் Video-க்கான Download Option கிடைக்கும்.
  • இங்கு 8 விதமான Format-களில் Download பன்னுகிறOptionகிடைக்கும்.Mobile-க்கு ஏற்ற 3GP Format-டிலும் Download பண்ணலாம்.

Damage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற

நாம் காப்பி செய்யும் சிடிகளில்  அந்த சிடியில் உள்ள தகவல்களை எழுதிவைப்போம். சில சமயம் எழுத மறந்துவிடுவோம்.சில நாட்கள் கழித்து சிடியை எடுத்து பார்க்கும் சமயம் டேமேஜ் (Damage) ஆகியிருக்கும்.எதில்போட்டாலும் சிடி ஓப்பன் ஆகாது. அதில் என்ன தகவல் உள்ளது என்பதும் நமக்கு தெரியாது. அந்த சிடியை வைத்துக்கொள்வதாக இல்லை குப்பையில் போட்டுவிடுவதா என குழப்பமாகும். குப்பையில போடும் முன்பு அதை செக்செய்து போடுவது நல்லது. சிலசமயம் அதில முக்கியமான தகவல்கள் இருக்க்கூடும். அதை சிடி டிரைவில போட்டால் ஒப்பன் ஆகாது. அந்த மாதிரியான சமயத்தில் நமக்கு கை கொடுக்க வருவது இந்த சாப்ட்வேர். உயிருக்கு போராடுபவருக்கு பெரிய டாக்டர் கடைசியாக முயற்சிசெய்வதில்லையா. அதுபோல் இந்த சாப்ட்வேர் மூலம் கடைசியாக முயற்சிசெய்து இதில உள்ள தகவல்களை மீட்டு எடுக்கலாம். இதிலும் தகவலை எடுக்க முடியாவிட்டால் அவ்வளவுதான்.மனதை தேற்றிக்கொண்டு சிடியை தூக்கி போட்டுவிடுங்கள்.இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்கள் கணிணியில் இன்ஸ்டால்செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இப்போது உங்களுக்கு சிடியை டிரைவில் போடசொல்லி தகவல் வரும் கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இப்போது சிடி டிரைவில் சிடியை போட்டு ஓ.கே.தாருங்கள். இப்போது மெயின் விண்டோவில் உள்ள சிடி ஐகானை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நெக்ஸ்ட் கொடுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில நீங்கள் சேமிக்க விரும்பம் போல்டரை தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். அதில பைல்கள் சிடியிலிருந்து டிரைவின் போல்டருக்கு காப்பி ஆகும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இறுதியாக பைல்கள் காப்பி ஆகிவிட்டதை காணலாம்.இதுதவிர்த்து நீங்கள் சிடியில ஒரே ஓரு பைலை மட்டும் காப்பி செய்வதானாலும் காப்பி செய்யலாம். மெயின்விண்டோவில் இரண்டாவதாக உள்ள ஐ –கானை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
எந்த பைல்வேண்டுமோ அதை மட்டும் தேர்வு செய்து அதைமட்டும் வேண்டிய போல்டரில புதியதாக பெயர் கொடுத்து காப்பி செய்யலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
.
சிறிது நேரம் கழித்து  நீங்கள் காப்பி செய்த போல்டரில் பார்த்தால் உங்கள் சிடியில் உள்ள தகவலானது ஜம்முனு அங்கு அமர்ந்திருக்கும். பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள்

கணினியோடு வேலை செய்யும் போது நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை !



பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர்.

* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத 'குஷன்' நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

* முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்�ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.


* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். 'ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்' ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.


* உடல் உழைப்புக் குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.


* இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்�ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.
 

Blogroll

About