Wednesday, September 26, 2012

மைக்ரோசாப்டின் வரலாறு 1975 முதல்..


ஒரு நல்ல செய்தியைக் கூறுகிறேன் – மைக்ரோசாப்ட் விரும்பிகளே!

Microsoft நிறுவனத்தின் வரலாற்றுச் சரித்திரத்தை அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்பவர்களே!
இப்போது Channel9 என்கிற இணையத் தளத்தில் “The History of Microsoft” என்கிற ஒரு காணொளித்தொடர் நிகழ்ச்சியை நீங்கள் காணலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இது வரையில் கடந்து வந்த பாதைகளைப் பற்றியும், தாண்டி வந்த தடைகளைப் பற்றியும் இந்தக் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Bill Gates மற்றும் Paul Allen ஆகிய இருவரும் சேர்ந்து எப்படியெல்லாம் வெற்றிநடை போட்டனர் என்பதை இந்தப் படம் விவரிக்கும்.
இது வரை வேறு எங்கும் காண இயலாத மைக்ரோசாப்ட் பற்றிய பல புகைப்படங்களைக் காணவிருக்கிறீர்கள்.
1975ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டுகளாக விவரிக்கப்பட்டுள்ளது

சுட்டி : http://channel9.msdn.com/shows/History/


பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம் ?

இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டைகள் வைத்துருப்பார்கள் அல்லது கடைசி ஒரு வங்கியின் ATM அட்டையாவது இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக பயன்படுத்துவதே இன்று பெரும் சவாலாக உள்ளது.
இணைய மூலம் பொருட்கள் வாங்குவது (online shopping) மற்றும் இணைய வங்கிச்சேவை (net banking) என புதிய தொழிநுட்ப்ப வசதிகளோடு நாம் வாழவேண்டிய கட்டாயச் சூழல் இது. ஆனால் இவற்றையெல்லாம் கையாழ்வதட்க்கு மின்னஞ்சல் ஒன்று அவசியம் மின்னஞ்சல் என்று வந்துவிட்டால் அதன் கடவுச்சொல் பாதுகாப்பானதா? என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா? என்பது மிக மிக முக்கியம், இல்லையென்றால் எல்லாம் அதோ கெதிதான் உழைப்பவன் யாரோ சும்மா உட்க்காந்து சாப்பிடுபவன் யாரோ என்று நம் கதை வராமல் பார்ப்பது நம் கையில்த்தான் உள்ளது.
சரி பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்!
நமது கடவுச்சொல் திருடுபோவது நமது கையில்தான் இருக்கிறது எனது கடவுச் சொல்லைக் கண்டுபிடியுங்கள்’ பார்க்கலாம் என்று உங்களிடம் சொன்னால் முதலில் என்ன செய்வீர்கள்? எனது பெயர், என் அப்பா பெயர், என் ஊர், என் வயது அல்லது 123456 , abcdef இந்த மாதிரிதானே முயற்சி செய்வீர்கள்? இதுபோன்ற பெயர்களை கொண்டு கடவுச்சொல் உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்த்துக்கொள்ளவேண்டும் .
இதுமாதிரி அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன அதில் இதுபோன்ற கடவுச்சொல் சேமித்து வைக்கும் கோப்பைக் கொடுத்தால் போதும் உடனே உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடித்துவிடும்.
அடுத்து நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யும்போது யாரும் பின்னால் இருந்து பார்க்கின்றனரா? என உறுதி செய்துகொள்ளுங்கள் பக்கத்தில் யாரும் இருந்தால் கடவுச்சொல் இடுவதை நிறுத்துங்கள் பல இடங்களில் 6 இலக்கமே போதும் எனச் சொல்வார்கள் ஆனால் நீங்கள் நீளமான கடவுச்சொல்லை அமைத்துக்கொள்ளுங்கள் கடவுச்சொல் இடும் கட்டம் தாண்டியும் நீளமாக கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளலாம்.
ஸ்பைவேர்,மால்வேர் போன்ற வைரஸ்கள் நமது கணினியில் இருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச் சந்தர்ப்பத்தில் நமது கடவுச்சொல்லும் போக வாய்ப்புண்டு.எனவே நீங்கள் கணினித்திரையின் கீழ்ப் பக்கம் வலது சொடுக்கி Task Manager திறந்து பாருங்கள் உங்களுக்குத் தெரியாத ஏதேனும் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதா? என்று இம்மாதிரி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்பவனவற்றை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது சேதம் விளைவிப்பது என்பது ஒரு சிலரால் மட்டும்தான் முடியும் எதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய் சொல்லக் கூடும் அதற்கு Hack மற்றும் Crack போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும் எனவே மற்றவர் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும்.
முடிந்தவரை ஜிமெயில் , யாஹூ மற்றும் கொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை (auto login) தவிருங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் அல்லது கடவுச்சொல் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும்போது லாக்கவுட் செய்து வெளியேறுங்கள்.
அடுத்து முக்கியமாக நாம் கடவுச்சொல் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துகளுக்கு இடையிடையே சிம்போல் (symbol) :- ! . , * – + `~ @ # $ % ^ & ( ) _ = : ; \ / போன்றவைகளையும் உள்ளடக்கி கடினமான கடவுச் சொல்லாக தேர்வு செய்வது மிக மிக பாதுகாப்பானது.

உசைன் போல்டின் வேகத்தை மிஞ்சும் ரோபோ சிறுத்தை தயாரிப்பு



உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும்விட மிக வேகமாக ஓடக்கூடிய ரோபோ சிறுத்தையை அமெரிக்க இராணுவ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பெண்டகனின் நிதியொதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட இந்த நான்கு கால்களையுடைய ரோபோ இயந்திரமானது, மணித்தியாலத்திற்கு 28 மைல்கள் வேகத்தில் ஓடியுள்ளது.
இந்த சீட்டா ரோபோவின் வேகமானது, உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும் விட அதிகமானதாகும். உசைன்போல்ட் 2009 ஆம் ஆண்டில் நூறு மீற்றர் தூரத்தை 27.8 விநாடிகளில் ஓடி புதிய உலக சாதனையை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி இயந்திரமானது போஸ்டன் டைனமிக்ஸினால் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் நிறுவனத்தினால் வெவ்வேறு வகையிலான இராணுவ ரோபோக்களின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் நிதிகளை கொண்டு ரோபோக்களை வடிவமைக்கும் செயற்பாட்டில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
‘மணித்தியாலத்திற்கு 28 மைல் வேகத்தை அடைவது என்பது மிகவும் சவால்மிக்க குறிக்கோளாகும். இதற்காக நான் எனது ரோபோ குழுவினரை பாராட்டுகிறேன்’ என ரோபோவியல் விஞ்ஞானியான டாக்டர் அல்பிரட் றிசி தெரிவித்துள்ளார்.
‘இந்த இயந்திரமானது வேகமாக ஓடும்போது அதனது வெளிப்புறப் பகுதிகள் சுதந்திரமாக இயங்க வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். இதற்காக ‘வைல்ட் கெட்’ என்ற பெயரில், திறந்த வெளியில் ஓடக்கூடிய இயந்திரத்தை உருவாக்கி வருகிறோம். இது அடுத்த வருடத்தின் முன்பகுதியில் பரிசோதிக்கப்படும்’ என அவர் கூறினார்.
எதிர்காலத்தில் இந்த இயந்திரமானது அவசர நிலைமைகளிலான பதிலளிப்பு, மனிதாபிமான உதவிகள், மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பங்களிப்புச் செய்யும் என அமெரிக்க படையினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இதேவேளை, மனிதனைவிட வேமாக ஓடக்கூடிய இவ் இயந்திரத்தின்மூலம், யுத்த களங்களில் அதிவேக கொலையாளியாக உருவாகலாம் என ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ இயந்திரத்துறை பேராசிரியரான நோயல் ஷார்க்கி தெரிவித்துள்ளார்.
 

Blogroll

About