Wednesday, July 31, 2013

Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி

Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி

கைத்தொலைபேசிகளில் Memory Card ஆனது தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய External Storage ஆக செயற்படுகிறது. பெரும்பாலானவர்கள் MP3 பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் தனிப்பட்ட தகவல்கள், Contacts, Message போன்றவற்றை இரகசியமாக சேமித்து வைத்திருப்பார்கள்.
அவ்வாறு இரகசியமான தகவல்களை சேமித்து வைத்திருக்கும்போது Memory Card இற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு கொடுத்திருப்பார்கள். பாஸ்வேட் மறக்காதிருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவேளை பாஸ்வேர்டை மறந்துவிட்டால் அத்தனை தகவல்களையும் இழக்கவேண்டியதுதான். Memory Card இற்கு பாஸ்வேட் பாதுகாப்பு கொடுத்தால் தொலைபேசியை கணினியுடன் இணைத்தால் கூட Memory Card இனை Windows Explorer காண்பிக்காது. இருக்கும் ஒரேயொரு வழி Memory Card ஐ Format செய்வதுதான். இதனால் சேமித்து வைத்திருக்கும் அத்தனை தகவல்களும் பறிபோய்விடும்.
சரி.. Format செய்யாமல் memory card ஐ Unlock செய்யமுடியாதா? முடியும். அதற்கு உதவி செய்கிறது FExplorer என்ற இலவச மென்பொருள்.
  • இந்த இணைப்பில் சென்று தரவிறக்கி தொலைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள்FExplorer
  • அதன் பின்னர் FExplorer ஐ Open செய்து C: ட்றைவினுள் செல்லுங்கள்
  • C: System செல்லுங்கள்
  • அங்கே mmcstore எனும் பெயரில் உள்ள File ஐ உங்கள் கணினிக்கு காப்பி செய்துகொள்ளுங்கள்
  • காப்பி செய்ததும் Notepad உடன் Open செய்யுங்கள்
  • இப்போது அதில் நீங்கள் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை காணலாம்.

Pen Drive மூலம் OS இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் !



எப்போதும் எதற்குமே ஒரு மாற்று நமக்கு அவசியம் ஆகிறது.கணினியை பொறுத்த வரையில் அதில் முக்கியமானது OS இன்ஸ்டால் செய்வதற்கு மாற்று வழிகள். சில வேளைகளில் நமது DVD Drive இயங்கவில்லை என்றாலோ அல்லது DVD Drive இல்லை என்றாலோ Pen Drive மூலம் மட்டுமே OS இன்ஸ்டால் செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்று இன்று பார்ப்போம்.

பென் டிரைவ் ஆனது நமக்கு பல விதங்களில் பயன்படுவதற்கு இதுவும் ஒரு உதாரணம். இதற்கு முன்னர் பென் டிரைவை எப்படி RAM ஆக பயன்படுத்துவது என்று பார்த்து இருந்தோம். 

இப்போது OS Install செய்ய எந்த பென் டிரைவை பயன்படுத்துகிறீர்களோ அதை உங்கள் கணினில் சொருகி ஒரு முறை Format செய்து விடவும். தொடர்ந்து கணினியிலேயே அது இருக்கட்டும். 

1. முதலில் இந்த இணைப்பில் சென்று WinSetupFromUSB என்ற மென்பொருளை டவுன்லோட் செய்யவும். 

2. RAR File ஆக டவுன்லோட் ஆகும் இதனை  Extract செய்து அதில் உள்ள Setup - ஐ Run செய்யவும். [இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை]

3. இப்போது கீழே உள்ளது போல அந்த மென்பொருள் இருக்கும். அதில் உங்கள் Pen Drive Detect ஆகி இருக்கும். 



4.  இப்போது உங்கள் பென் டிரைவ் பெயருக்கு கீழே Add To USB disk என்று உள்ளத்தில் உங்கள் Windows XP/Vista/7 Setup File ஐ நீங்கள் தெரிவு செய்து கொடுக்க வேண்டும். ஏற்கனவே DVD யில் உள்ளவர்கள் நேரடியாக அதனை தெரிவு செய்யலாம்.[நண்பர்களுக்கு இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இது பயன்படும்.

இல்லை என்றால் OS-இன் ISO File-ஐ உங்கள் கணினியில் இருந்து தெரிவு செய்ய வேண்டும். இப்போது கீழே உள்ளது போல தெரிவு ஆகி இருக்கும். 


5.  உங்களுக்கு எதை தெரிவு செய்தீர்களோ அது மட்டும் தெரிவு ஆகி இருக்கும். இப்போது GO என்பதை கிளிக் செய்து விடுங்கள். 

6. சில நிமிடங்களில் உங்களுக்கு கீழே உள்ள சிறிய விண்டோ வரும். 


அவ்வளவு தான் இனி உங்கள் பென் டிரைவ் மூலம் OS இன்ஸ்டால் செய்து விடலாம். 

[XP பயனர்கள் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் Comment Box மூலம் அது குறித்து சொல்லவும்]

Pen Driveவில் உள்ளவற்றை இரகசியமாக Copy செய்ய வேண்டுமா?

கணினியின் Motherboard இல் காணப்படும் நினைவகக் கூறுகளில் ஒரு பகுதியாக அமைப்பு நினைவகத்தை கருதலாம்.இந்த நினைவகமானது குறைந்தளவில் மின்வலுவை பயன்படுத்தும் CMOS சில்லுகளின் மூலமே உருவாக்கம் பெற்றுள்ளது.CMOS என்பதன் விரிவாக்கம் Complementary Metel Oxide Silicon என்றவாறு அமையும்.CMOS Chip இற்கு கணினியின் மின் இணைப்புடன் தொடர்பின்றி தொடர்ச்சியாக பற்றரி மூலம் மின்வலு வழங்கப்படும்.இந்த மின்வலுவானது Motherboard இல் இணைக்கப்பட்டுள்ள சிறிய பற்றரி மூலம் பொதுவாக வழங்கப்படும்.இந்த சிறிய பற்றரி மூலம் பொதுவாக வழங்கப்படும்.இந்தச் சிறிய பற்றரி சுமார் ஐந்து வருடங்களுக்கு மின்வலுவை வழங்கும் திறனைக் கொண்டுள்ள போதும் மூன்று வருடங்களுக்கு மேலாக கணினியில் குறித்த பற்றரி பாவிக்கப்பட்டால் அதனை மாற்றுவது பொருத்தமானதாகும்.

CMOS ஆனது கணினி பற்றிய அடிப்படை தகவல்களான கணினியில் குறித்த பற்றரி பாவிக்கப்பட்டால் அதனை மாற்றுவது பொருத்தமானதாகும்.CMOS ஆனது கணினி பற்றிய அடிப்படைத் தகவல்களான கணினியில் இணைக்கப்பட்டுள்ள வன்தட்டுக்களின் வகை,எண்ணிக்கை,நினைவக அளவு,நினைவக அமைப்பு,கணினியின் நேரம்,திகதி மற்றும் வன்பொருள் அமைப்புக்கள் ஆகியவற்றை சேமித்து வைத்திருக்கும்.இந்த Settingsஐ கைமுறையாகவோ (Manual) அல்லது தன்னியக்கமாகவோ மாற்றமுறச் செய்ய முடியும்.CMOS தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும்Chipகள் மின் வலுவை மிகவும் வினைத்திறனாக குறைந்தளவில் பாவிப்பது மிகப் பெரிய அனுகூலமாகும்.கணினிகள் உருவாக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் இந்தத் தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை.இதற்கு இத் தொழில்நுட்பம் அப்போதைய நிலையில் மிகவும் உயர் செலவுடையதாக காணப்பட்டதே காரணமாகும்.

பின்னர் IBM நிறுவனத்தால் இது எல்லா கணினிகளிலும் சேர்க்கப்பட்டது.CMOS Chip மற்றும் அதனோடு இணைந்த பற்றரி ஆகிய இரண்டையும் சேர்த்து "PC's CMOS" என அழைக்கப்பட்டது.ஆனாலும் இந்தப் பெயரும் நீண்ட நாட்களுக்கு நிலைக்க வாய்ப்பேற்படவில்லை.வேறு நிறுவனங்களாலும் உற்பத்தி செய்யப்பட்ட கணினிகளில் இந்த Chip மற்றும்
அதனோடு சேர்ந்தால் போல் பற்றரியும் காணப்பட்டதால் இப்பெயர் வழக்கிலிருந்து ஒழிந்தது.

CMOS Setting ஐ மாற்றிக் கொள்ள !......


முதலில் CMOS இல் மாற்றங்களை செய்ய எமக்கு என்ன தேவை உள்ளது என்பது பற்றி நாம் ஆராய வேண்டியுள்ளோம்.அடிப்படையாக உங்கள் கணினியின் வன்பொருள் தகவு நிலைபற்றியும் தொகுதியின் (System) மொத்த இயக்கத்தை இயைபாக்கவுமே இவ்வாறாக நீங்கள் மாற்றங்கள் செய்ய முனையலாம்.வன்தட்டுக்கள் (Harddisk) பொதுவாக IDE ஊடாக இணைக்கப்படும்.வன்தட்டுக்கள் ஒழுங்காக இயங்குவதற்கு அவை CMOS Setup இனூடாக இயைபாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.SCSI மூலம் தொடுக்கப்படும் தட்டுக்கள் இவ்வாறு இயைபாக்கப்பட வேண்டிய அவசியமில்லை.ஏனெனில் அவை BIOS (Basic Input Output System) உடன் ஏற்கனவே இயைபாக்கப்பட்டிருக்கும்.கணினியின் தொழிற்பாட்டில் CMOS இன் Setting தாக்கத்தை உண்டு பண்ணும்.CMOS இன் ஊடாக கணினியின் நினைவகம் எந்தளவில் இயங்குகிறது.தற்காலிக சேமிப்பு தன்மை துலங்கல் அடையச் செய்யப்பட்டுள்ளதா,PCI தொடுப்பு
கள் எந்தளவு வேகத்தில் இயங்கவேண்டும் போன்ற பல விடயங்களை மாற்றி அமைக்கலாம்.Menu ககைள் கொண்டுள்ள CMOS Setup மூலமாகவே CMOS இல் மாற்றங்களை உண்டுபண்ண முடியும்.இது Chipset உடன் இணைந்தாற் போல உங்கள் BIOS இல் அமைப்புக்களை மாற்றங்களுக்கு உட்படுத்த கூடியது.CMOS இன் Setup பகுதிக்கு விசைப்பலகையிலுள்ள சில விசைகளை அல்லது ஒரு விசையினை கணினி தொடங்கும் நிலையில் அழுத்த வேண்டும்.CMOS Setup ஐப் பெற்றுக் கொள்ள நாம் அழுத்தவேண்டிய விசைகளின் சேர்ககை கணினி தயாரிப்பாளர்களிடையே வேறுபடும்.சாதாரணமாக பயன் படுத்தப்படும் விசைகள் (delete, Esc, F1, F2, F4) அல்லது  எந்த விசையை அழுத்தினால்  CMOS Setup இந்கு செல்லலாம் என்ற விடயம் கணினி தொடக்கப்படும் போது திரையில் காட்சியாகும்.(கணணி விண்டோஸ் லோடிங் ஆகும் முன்னர் )
இதன் மூலம் CMOS  Setting சென்று CMOS ஐ மாற்றிக்கொள்ளலாம்.

கணனியை Format செய்வது எப்படி ?......... Windows 7 install செய்யும் முறை !

சரி நம்மில் பலருக்கு கணனி பாவிக்க தெரிந்திருந்தும் கணனியை எவ்வாறு Format செய்வது என தெரியாது. இலகுவாக செய்யலாம். முதலில் Windows 7 முழுமையான பதிப்பை பதிவிறக்கி DVD ஒன்றில் Write செய்து கொள்ளவும். பின்னர் அதனை செலுத்தி கணனியை Restart செய்யவும். கணனி தெடக்கத்தில் கீழ்வருமாறு காணப்படும் அதில்,
காணப்படும் F11 to Enter Boot Menu என இருக்கும் இது கணனிகளுக்கிடையில் வேறுபடும் அதனால் அதில் F11 என போடப்பட்ட இடத்தில் என்ன கீ இருக்கிறதோ அதனை அழுத்தவும். அதன் பின் கீழ்வரும் Menu தென்படும்
அதில் 1வதாக காணப்படும் CD-ROM/DVD-ROM இனை தெரிந்தெடுத்து Enter செய்திடவும் பின்னர் கணனியானது DVD மூலமாக தொடங்க வினாவும் கீழ் உள்ளவாறு
இவ்வாறு கேட்கும் போது 5 செக்கன்களுக்குள் ஏதாவது Key ஐ இழுத்தி Boot Menu க்கு செல்லலாம். பின் கீழ் உள்ளவாறு வரும்.
அதில் அனைத்தையும் சரியாக Set செய்து விட்டு Next Button ஐ அழுத்தி அடுத்த பகுதிக்கு செல்க. அடுத்த பகுதி கீழ் உள்ளவாறு காணப்படும்
இதில் Install Now என்பதை அழுத்தவம் சிறிது நேரத்தில் கீழ்வரும் திரை தென்படும்.
அதில் I accept the following terms என்பதில் Tick செய்து Next ஐ அழுத்தவும். பின்னர் கீழ்வருமாறு திரை தோண்றும்
அதில் Custom என்பதை Click செய்யவும் பின் அடுத்த திரை கீழ் உள்ளது போல் தோண்றும்
அதன் பின் Drive Option(Advanced) என்பதை click செய்து பின்வரும் திரையை பெறலாம்.
அதில் எந்த Drive ல் நீங்கள் Windows 7 ஐ Install செய்ய போகிறீர்களோ அதை Click செய்து Format என்பதை கொடுக்கவும் இனி என்ன கணனியை Format செய்து அப்படியே Next செய்தால் சரி சற்று நேரம் எடுக்கும்.

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்…

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?

அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.

Tuesday, July 30, 2013

Best Five Image Editing Software


Photoshop screen shot.
Not surprisingly, Photoshop is the winner by a landslide, garnering over half of all the total votes. Photoshop is what comes to mind when image editing is involved there’s very little that can be said about it that hasn’t been said already.
With an insurmountable amount of features that help you manipulate and enhance photos as well as create web graphics, all while helping you manage your workflow and image editing environment – Photoshop comes in at numero uno as the best image editing software currently in the market.
2. GIMP
GIMP screen shot.
GIMP – which stands for the GNU Image Manipulation Program – is a feature-packed and powerful open source image editor that can be used in all major operating systems (Linux, Mac, and Windows). It has a customizable interface so that you can easily set the view and behavior of GIMP.
It has a huge set of retouching tools that will allow you to perform advanced image retouching and manipulation. The GIMP outputs your work in many common formats like JPG, GIF, PNG, TIFF, and even PSD (Photoshop’s native file format).
Fireworks screen shot.Fireworks is Adobe’s image editing software for the web designers. It excels in several areas over its big brother Photoshop, namely in high-fidelity prototyping of sites and a workspace environment that’s optimized for web designers. It is also a raster and vector hybrid, being able to work with raster-based images and vector-based graphics better and more symbiotically than Photoshop.
Inkscape screen shot.
Inkscape is an open source vector graphics editor much like Adobe Illustrator, CorelDraw, and Xara X. Its default file format is web standards compliant Scalable Vector Graphics (SVG) under W3C’s specifications. 
Pixelmator screen shot.
Pixelmator is a fast and powerful image editing software for the Mac operating system. With its intuitive and beautiful Graphical User Interface (GUI), support for layers to organize your document, a large assortment of painting tools, and simple-to-use photo correction tools – Pixelmator is an excellent pick for Mac users who don’t quite need the features (and price tag) of Photoshop. 

கணினியில் என்னென்ன நிகழ்ந்துகொண்டு இருக்கிறது?

உங்கள் கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் இந்தப் பதிவு உங்களுக்காகவே!

விண்டோஸ் இயங்குதளத்தில் (OS) என்ன நடந்துகொண்டு இருக்கிறது?

என்னென்ன செயல் (Process) கணினியில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது?

ஒவ்வொரு செயலுக்குப் பின்னனியில் இருக்கும் மர்மம் என்ன?

எவ்வளவு நினைவகம் (Memory) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது?

Micro Processorன் உபயோகம் எந்த அளவுக்கு உள்ளது?

எந்தெந்த dll கோப்புகள் தற்சமயம் உபயோகத்தில் உள்ளன?

எந்தெந்த IP முகவரியுடன் உங்கள் கணினி தற்போது இணைப்புடன் உள்ளது?

உங்கள் கணினியுடன் இணைந்துள்ள தொலைவில் உள்ள கணினிகளின் (Remote PC) IP முகவரிகள்?

தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் சேவைகளும், நிறுத்தப்பட்ட சேவைகளும் யாவை?

விண்டோஸ் ஆரம்பிக்கும்போது(Startup) எந்தெந்த செயல்களும் சேர்ந்து (Auto-start) ஆரம்பிக்கின்றன?

இயங்குதளத்தின் version, பயனர் பெயர் (User name), நினைவகக் கொள்ளளவு, Processor ஆகிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்வது எப்படி?

இது போன்ற பல வினாக்களுக்கு உரிய விடைகளை அறிய ஒரு இலவச மென்பொருள் இங்கே

What's Running is a product that gives you an inside look into your Windows 2000/XP/2003 system.

Explore processes, services, modules, IP-connections, drivers and much more through a simple to use application. Find out important information such as what modules are involved in a specific process.

Control your system by starting and stopping services and processes. Configure your startup programs easily.

சாதாரணமாக Task Manager காட்டாத பல செய்திகளை இந்த மென்பொருள் காட்டிக் கொடுக்கின்றது. இதனால் ஏதேனும் virus பின்னணியில் இயங்குகின்றதா? Registry மூலம் தானாக இயங்கும் மென்பொருட்கள் எவை? IP தொடர்புகள் எத்தனை உள்ளது? போன்ற பல System தொடர்பான தகவல்களைப் பெறுவதுடன், உங்களால் எளிதில் அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

இது தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசம் (Free for non commercial / personal use) ஆகும்.

ஆக மொத்தத்தில் கணினியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய நினைப்பவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள்!

தரவிறக்க சுட்டி

PEN DRIVE வை RAM ஆக பயன்படுத்தலாம் ...! எப்படி என்று பார்போமா?

நமது கணனிகளில் சில வேலை போதுமான அளவு RAM  காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக  RAM ஒன்றை பொறுத்துவதானால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேலை  Pen Drive களின் விலை குறைவானதே. 
முதலில் Windows Xp யில் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணனியின் performanceயை அதிகரிப்பது  என பார்ப்போம். 


முதலில் Pen Drive ஒன்றை ( குறைந்தது 1GB ) USB port வழியாக பொறுத்துங்கள்.
  1. பின் My Computer ல் Right Click செய்து  Properties தெரிவு செய்யுங்கள்.
  2. அதிலுள்ள Advanced பகுதியில்  Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
  3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து Pen Drive வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
  4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max  எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
  5. பின்னர் Set செய்து உங்கள் கணனியை Restart செய்யுங்கள்.






அல்லது  ReadyBoost  அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்  வை பொறுத்தி eboostr control pannel இல் pendrive வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)

Windows 7 யில் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்துவது என பார்ப்போம்.  உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா "உங்கள் கணனி 256GB RAM கொண்டிருந்தால்...."  8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடைய pendrive பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம். 

 உங்கள்  Pen Drive ல் Right Click செய்து  Properties தெரிவு செய்யுங்கள்.
அதில்  ReadyBoost  பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
 

"Space to reserve for system speed" என்ற இடத்தில் கூட்டி விடவும்.
இப்போது  Apply செய்து விடுங்கள் , அவ்வளவுதான் ...  உயர் performance ஐ அனுபவியுங்கள்...

Pen drive வில் Write Protected எனவருகின்றதா? Remove பண்ணுவோமா?

usb-drive-write-protected
 நீண்ட இடைவெளியின் பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, வலைத்தளத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது. எனினும் அக்கால இடைவெளியில் நான் முகம்கொடுத்த பிரச்சினைகளில் ஒன்று எனது பென் ட்ரைவில் Write protected என ஒரு செய்தி வந்ததே.

சில வேலைகளில் நீங்களும் இப்பிரச்சினைக்கு முகம்கொடுத்திருப்பீர்கள், Pen drive வினை வீசி புதிய Pen drive வாங்கி விட்டீர்களா? அதற்காத தீர்வுகளை உங்களுடன் பகிர்கின்றேன்.

இதற்கு முன் என் சில நண்பர்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் வந்திருக்கின்றன என்றாலும் என்னால் எதுவித தீர்வுகளையும் வழங்க முடியாமல் போய்விட்டது, அதனால் அவர்களும் தம் Pen drive வினையே வீசிவிட்டார்கள்.
முதலில் Write Protected Pen drive வினால் ஏற்படும் பிரச்சினைகளை பார்ப்போம், இவ்வாறான பென்ட்ரைவிலுள்ள கோப்புகளை நம்மால் எதுவித மாற்றங்களையும் செய்யமுடியாது, அவ்வாறு மாற்றங்களை செய்ய முற்படும் போது பின்வரும் செய்திகளை காணக்கூடியதாக இருக்கும்.
  • Cannot copy files and folders, drive is write protected
  • Cannot format the drive, drive is write protected
  • The disk is write protected
  • Remove write protection or use another disk
  • Media is write protected 
இவ்வாறான பிரச்சினைகள் pen drive களில் மடடுமன்றி memory card மற்றும் iPod போன்ற USB portable devices களிலும் தோன்றலாம். இதனால் உங்கள் பென்ட்ரைவினை format செய்யகூட முடியாத நிலை ஏற்படும். இது பலருக்கு தலையிடியாக கூட இருந்திருக்கலாம்.

http://img.ehowcdn.co.uk/article-page-main/ehow-uk/images/a07/tq/oh/fix-drive-thats-write-protected-800x800.jpghttp://www.thelifedigital.com/wp-content/uploads/2009/03/viruspenflashdrive.jpg
இதற்கு சில Virus கள் மற்றும் முறையற்ற ரீதியில் கணனியிலிருந்து Safety remove  USB செய்யாமையே காரணங்களாக குறிப்பிடலாம். 
தீர்வு : -
இதற்கு பல்வேறு தீர்வுகள் இருந்தாலும் மிகச்சிறந்த தீர்வினை உங்களுடன் பகிர்கின்றேன்.
01. இங்கு தரப்பட்டுள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள், தரவிறக்கச் சுட்டி
பின்னர் உங்கள் Pen drive வினை கணணியுடன் இணைத்து தரவிறக்கிய மென்பொருளை டபல் கிளிக் செய்யுங்கள், உங்கள் பென் ட்ரைவ் Format ஆக தொடங்கும். Format ஆகி முடிந்தவுடன் Pen drive வினை Safety remove செய்து மீண்டும் கணனியில் பொருத்துங்கள்,
சில நேரங்களில் உங்கள்  Pen drive வின் Write protected இப்போதே நீக்கப்பட்டிருக்கும். 
அவ்வாறு இல்லையெனின் அதாவது இன்னும் Write protected என காட்டப்பட்டிருப்பின், கீழுள்ள படிமுறைகளை செயற்படுத்துங்கள்.

02. Start --->> Run, கிளிக் செய்து regedit என டைப்செய்து Enter பொத்தானை அழுத்துங்கள், பின்  registry editor திறக்கும். அதில்

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies
 write-protection-registry
செல்லுங்கள், அங்கு StorageDevicePolicies என இல்லாவிடின் இங்கு தரப்பட்டுள்ள சுட்டியை கிளிக் செய்து add.bat  பின் டபல் click செய்யுங்கள். இப்போது registry editor இல் Storage Device Policies இடப்பட்டுவிடும். 
பின் WriteProtect எனும் Key யினை Double Click செய்து படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Value Data எனும் பகுதியில் 0 (பூச்சியம்) என டைப் செய்து  OK பொத்தானை அழுத்துங்கள்.


பின்னர்  Registry யை மூடி விட்டு , கணணியை restart செய்யுங்கள். மீண்டும் உங்கள் பென் ட்ரைவினை கணனியில் பொறுத்துங்கள், அவ்வளவே தான்...

இன்னும் உங்கள் Pen drive வில் Write Protected என செய்தி வருகின்றதா? உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

Hard Disk ஐ Format செய்யாமல் புதிய Partition உருவாக்குவது எப்படி?

கணனியை Format  செய்யாமல் Partition களை  உருவாக்குவது சாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்?  Format  செய்து பின்  hard disk கினை தேவையானpartition களாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை.

இதற்க்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதி  செய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.
கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி புதிய  Partition ஒன்றை  SYSTEM DRIVE இல் உருவாக்கிக் கொள்ளலாம்.



1) முதலில் My Computer இல் Right click செய்து Manage என்பதை தெரிவு செய்யுங்கள் பின் Computer Management Windowதோன்றும்.

2) அதில்  Storage  சென்று Disk management என்பதை clickசெய்யுங்கள்.

3) அதில் வன்தட்டு , எனைய  storage media க்களின் தகவல்கள் காண்பிக்கப்பட்டிருக்கும்.
இப்பொழுது உங்களுக்கு Partition செய்யவேண்டிய Disk Driveவினை தெரிவுசெய்யுங்கள்.
4) பின்னர் அதில் Right click செய்யது  Shrink Volume என்பதை click செய்யுங்கள்.    அதன் பின்னர் windows தன்னியக்கமாக  அந்த Partition  இல் உள்ள  free space ன் அளவை காட்டும்.

5) Shrink வின்டோவில் partition பிரிக்க தேவையான disk size வழங்குங்கள். இதன் போது hard disk கில் காட்டப்படும் free space இன் அளவினை பொருத்து தீர்மானிக்க.
6) பின்னர் shrink என்பதை click செய்யுங்கள் .சில வினாடிகளிலேயே புதிய  Disk கோப்புகளுக்கு எதுவித பாதிப்புகளை ஏறப்படுத்தால் தோன்றும்.
7) புதிதாக உருவாக்கப்பட்ட Disk இன்னும் accessibleசெய்யப்படவில்லை.
8) இப்பொழுது unallocated drive இல் Right click செய்து New Simple Volume என்பதை  தெரிவு செய்யுங்கள்.
9) Next பொத்தானை Click செய்க .இப்பொழுது Partition னுக்கு தேவையான size இனை வழங்குங்கள். (you can choose whole size right now).
10) Drive Letter இனை தெரிவு செய்த பின் Next பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
11) பின்னர் Format Settings  இல் NTFS என்பதை File System  பிரிவில் தெரிவு செய்யுங்கள்.  Allocation Unit Size பிரிவில் Default என்பதையும். Volume label இல் New Volume எனவே விட்டுவிடலாம். (தேவையானால் மாற்றிக்கொள்ளவும் முடியும்).
12) Perform a Quick Format என்பதை Check இசய்யது Nextபொத்தானை click செய்யுங்கள் .
புதிய வன்தட்டுப் பிரிவு தயாராகிவிட்டது. 

உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் அல்லது சிக்கல்கள் இருப்பின்  commentகளாக பகிர்க.இப்பதிவு பிடித்திருந்தால் share செய்யவும் மறக்காதீர்கள்..
 

Blogroll

About