தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Sizeஅதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம்.
இதற்கு JPEGmini என்ற தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த தளம் நீங்கள் எடுத்துள்ள படத்தின் அளவை அதன் தரம் குறையாமல் 50-80% வரை Sizeமட்டும் குறைத்து தருகிறது. இந்த தளத்தில் JPEG File களை மட்டுமேUpload செய்ய முடியும்.
மேலே உள்ள படத்தின் ஒரிஜினல் சைஸ் 2.4 MB. JPEGmini இதனை 500KBஅளவுக்கு குறைத்துள்ளது.
இதே போல உங்கள் ஒரிஜினல் படத்தின் Size பொறுத்து Compress ஆகி குறைந்த Sizeக்கு கிடைக்கும். உத்தேசமாக கீழே உள்ளபடி படத்தின் அளவு குறைக்கப்படும்.
JPEG Photo Resolution
|
Typical JPEGmini file size reduction
|
8 MP and higher
|
70 – 80%
|
3 – 7 MP
|
50 – 70%
|
1 – 2 MP
|
40 – 60%
|
Lower than 1 MP
|
30 – 50%
|
JPEGmini என்ற தளத்திற்கு சென்று Try It Now என்பதை கிளிக் செய்து படங்களை Upload செய்யலாம். ஒவ்வொரு படமாக செய்ய விரும்புபவர்கள் தளத்தில் Signup செய்ய தேவை இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களைSize குறைக்க விரும்பினால் அந்த தளத்தில் இலவசமாக Sign Up செய்து மொத்தமாக நிறைய படங்களை Upload செய்து அளவை குறைக்கலாம். ஒரே சமயத்தில் 1000 படங்கள் வரை Upload செய்யலாம். Image Size 200MB க்குள் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment